கோவையில் கவர்னருக்கு கருப்பு கொடி

1 Min Read
கருப்புக்கொடி போராட்டம்

கோவையில் கவர்னர் ஆர்.என். ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் முற்போக்கு அமைப்பினர் கைது

- Advertisement -
Ad imageAd image

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது இதில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார் .

 இந்த நிலையில் கோவை லாலி ரோடு சிக்னலில் அனைத்து அமைப்பினர் கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்

கோவை ராமகிருஷ்ணன் கைது

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்‌‌நீட் தேர்வு எதிராக ஒப்புதல் அளிக்க மறுக்கும் கவர்னரை கண்டித்தும் தமிழ்நாடு நலன் சார்ந்த திட்டங்களை தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றிய நிலையில் மசோதாக்களுக்கும் அனுமதி வழங்காமல் தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என்றும் கவர்னர் அறிவித்து  தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவர்னர் ஆர்.என் ரவி திரும்பி போக வலியுறுத்தி முழக்ங்கள் எழுப்பினர்.

போலீஸ் குவிப்பு

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை திராவிடர் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருப்புக்கொடி போராட்டத்தை ஒட்டி லாரி ரோடு சிக்னலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது போலீசார் கருப்பு கொடி காட்ட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Share This Article

Leave a Reply