அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முடிவுகள் அடுத்த 5 ஆண்டு காலத்தில் எடுக்கப்படும் – அண்ணாமலை..!

2 Min Read

அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முடிவுகள் அடுத்த 5 ஆண்டு காலத்தில் எடுக்கப்படும் என கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.

- Advertisement -
Ad imageAd image

கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை அடிவாரத்தில் இன்றைய பிரச்சாரத்தை துவங்கினார். மருதமலை அடிவாரத்தில் சாமி கும்பிட்ட பின் தனது பிரச்சாரத்தை தொடங்கியவர் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.

அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முடிவுகள் அடுத்த 5 ஆண்டு காலத்தில் எடுக்கப்படும் – அண்ணாமலை

அப்போது இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல் எனவும், யார் பிரதமராக ஜெயிக்க போகின்றார் என தெரிந்து நடைபெறும் தேர்தல் எனவும் தெரிவித்தார். அப்போது 2024 – 2029 காலம் வளருகின்ற இந்தியா வளர்ந்த இந்தியாவாக மாறப்போகும் காலம் எனவும், இந்த முறை 400 எம்பிகளை தாண்டி அமர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இந்த காலகட்டத்தில் ஆர்டிக்கல் 370, ராமர் கோவிலை தாண்டி முக்கிய முடிவு இருக்கின்றதா ? என்றால், அரசியல் காரணங்களுக்காக இதுவரை எடுக்கப்படாத முடிவுகள் இந்த காலத்தில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பாஜக

மேலும் முக்கியமாக நதி நீர் இணைப்பு இந்த காலகட்டத்தில் செய்யப்போகின்றோம் எனவும், ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி தேவைப்படும், அதை செய்ய போகின்றோம் எனவும் தெரிவித்தார்.

பிரதமருக்கு கண்ணுக்கு எட்டியதூரம் வரை எதிரிகள் இல்லை எனக்கூறிய அவர், கடந்த 20 ஆண்டு காலமாக வளர்ச்சி தேங்கிய நிலையில் இருக்கின்றது, இங்கிருத்த எம்பிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லாத நிலையில், பிரதமரை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் இருந்திருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

அண்ணாமலை

அப்போது தேங்கி இருக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு 1040 கோடி பணம் கொடுத்தும் கூட அது முறையாக பயன்படுத்தபடுகின்றதா என தெரியவில்லை.

கோவையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோவையில் நம் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை எனவும் தெரிவித்தார். ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், இன்று முதல் 16 நாட்கள் தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

பிரதமர் மோடி

திமுகவை பற்றி நாம் பேசாத பேச்சில்லை, இன்னும் 16 நாளில் மட்டும் பேசி எதுவும் ஆகபோவதில்லை என தெரிவித்தார். ஓரே ஒரு வண்டி மட்டும் நேரடியாக டெல்லி செல்கின்றது.

அப்போது மற்ற கட்சிகளை பற்றி பேச தயாராக இல்லை எனவும் தெரிவித்தார். மருதமலை ஐஓபி காலனியில் குப்பை சுத்தகரிப்பு நிலையம் வேண்டும், குப்பையை நீக்கி நகரை சுத்தமாக வைத்திருப்பதில் பின்னோக்கி செல்கிறோம் என தெரிவித்தார்.

அண்ணாமலை

அப்போது நகரங்கள் குப்பை மேடாக மாறிக்கொண்டு இருக்கின்றது, அடுத்த 16 நாட்கள் மக்களிடம் நீங்கள் தான் செல்ல வேண்டும் என மக்களவை வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார். அப்போது ஏராளமான பாஜக-வினர் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

Share This Article

Leave a Reply