பதிண்டா துப்பாக்கிச் சூட்டில் மரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த 2 ராணுவ வீரர்களின் உடல்கள் இன்று அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் பதண்டா ராணுவ முகாமில் மேலும் ஒரு ராணுவ வீரர் துப்பாக்கி குண்டு பயந்து இறந்துள்ளார் .
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24) ஆகியோரும், சந்தோஷ் நகரல் (25) மற்றும் சாகர் பன்னே (25) ஆகியோரும் உயிரிழந்தனர்.
இதில் யோகேஷ்குமார் தேனி மாவட்டம் தேவாரம் அருகே மூனாண்டிபட்டியைச் சேர்ந்த ஆவார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் யோகேஷ்குமார் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர். யோகேஷ்குமாரின் உடல், இன்று (வெள்ளி) டெல்லியிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு காலை 8.10 மணிக்கு கொண்டுவரப்படுகிறது. பின்னர், ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டு, அங்கு ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
மற்றொரு வீரரான கமலேஷ் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை ரவி, நெசவுத் தொழிலாளி. தாய் செல்வமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சந்தோஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். 2-வது மகனான கமலேஷ் பிஏ பொருளாதாரம் படித்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவப் பணியில் சேர்ந்தார்.
இந்நிலையில் கமலேஷ் உயிரிழந்ததைக் கேள்விப்பட்ட குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர். கடந்தஒன்றரை மாதங்களுக்கு முன்புதான் விடுமுறையில் வீட்டுக்கு வந்துவிட்டு திரும்பி சென்றுள்ளார்.
கமலேஷ் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரை மட்டுமில்லாமல் பனங்காடு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கமலேஷின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலுமொரு ராணுவீரர் மரணம் .
நான்கு ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட 12 மணி நேரம் கழித்து, அதே ராணுவ முகாமில் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து இறந்தார். அவர் காவலாளி பணியில் இருந்தார். அவர் அருகே அவரது பணி துப்பாக்கியும், காலி தோட்டாக்களும் இருந்தன. கன்னத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்த அவரை ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவர் பெயர் லகுராஜ் சங்கர்.
4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட 12 மணி நேரம் கழித்து, அதே ராணுவ முகாமில் ஒரு ராணுவ வீரர் குண்டு பாய்ந்து இறந்தார். அவர் காவலாளி பணியில் இருந்தார். அவர் அருகே அவரது பணி துப்பாக்கியும், காலி தோட்டாக்களும் இருந்தன. கன்னத்தில் குண்டு பாய்ந்த நிலையில் கிடந்த அவரை ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சற்று நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது. அவர் பெயர் லகுராஜ் சங்கர்.

விடுமுறை முடிந்து, கடந்த 11-ந் தேதிதான் அவர் மீண்டும் பணிக்கு வந்திருந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால், தவறுதலாக துப்பாக்கி வெடித்திருக்கலாம் என்று ஒரு ராணுவ அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், அவரது மரணத்துக்கும், 4 பேர் கொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர் லகுராஜ் சங்கர் மரணம் குறித்து பதிண்டா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.