காவல்துறை விசாரணை கைதி சாந்தகுமார் காவல் நிலையத்தில் மரணம்: எடப்பாடி கண்டனம்

1 Min Read

காவல்துறை விசாரணை கைதி சாந்தகுமார் என்பவர் காவல் நிலையத்தில் உயிர் இழந்ததற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி

விடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம்.

பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு இந்த விடியா அரசின் முதல்வரையும் வலியுறுத்துகிறேன்.” என்று தனது கடும் கண்டனத்தை தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Share This Article

Leave a Reply