திமுக எம்பிக்கள் கூட்டத்தில் வருகிற ஜூன் 14 ஆம் தேதி கோவையில் தேர்தல் வெற்றி விழாவையும், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும், முதல்வருக்கு நன்றி பாராட்டு விழாவையும் இணைத்து முப்பெரும் விழாவாக நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தேதி திமுகவினர் சிலர் மத்தியில் புருவத்தை உயர வைத்தது. வருகிற ஜூன் 14 ஆம் தேதி சரியாக ஒரு வருடம் முன்பு இப்போது சிறையில் இருக்கிற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நாள்.

அந்த நாளில் தேர்தல் வெற்றி விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடத்துவதை, குறிப்பாக கோவையில் நடத்துவதை கொங்கு மாவட்டங்களில் உள்ள செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சற்று வேதனையோடும், கோபத்தோடும் பார்ப்பதாக முதல்வருக்கு தகவல் சென்றிருக்கிறது.
இந்த நிலையில் கோவையில் நடைபெறும் அந்த விழாவின் தேதி மாற்றப்பட்டு ஜூன் 15 ஆம் தேதி முப்பெரும் விழா நடைபெறும் என தற்போது தகவல்கள் வந்துள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.