நீலகிரி மாவட்டம் கண்ணேறி முக்கு பகுதிக்கு வருகை தந்த மேற்கு ஆஸ்திரேலிய சபாநாயகர் மற்றும் ஆளுங்கட்சி எதிர்கட்சி சட்டமன்ற குழுவினர் தமிழ்நாடு மற்றும் ஆஸ்திரேலிய இடையே நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வந்துள்ளனர் அப்போது கண்னேறி முக்கு பகுதிக்கு வருகை தந்த போது படுகர் இன மக்கள் ஆடல் பாடலுடன் உற்சாக வறவேற்பு அளித்தனர்.

நவீன நீலகிரியை உருவாக்கியவரும் தேயிலை தோட்டங்கள் மற்றும் உதகை படகு இல்லத்தை உருவாக்கிய ஆட்சியர் ஜான் சலீவனின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நீலகிரி மாவட்டத்தின் முதல் கலெக்டர்
ஜான் சலிவனின் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர் பின்பு நீலகிரி மாவட்ட படுகர் இன மக்களோடு பராம்பரிய நடனமாடி மகிழ்ந்தனர் பின்னர் டாக்டர் ஜெகதீஷ் MLA அவர்களின் வீட்டிற்கு சென்று அவர் பெற்றோர்களிடம் ஆசிப்பெற்றனர் பின்பு நீலகிரி மாவட்ட மக்களின் கலாச்சாரம் மற்றும் வரலாறு குறித்த புத்தகங்கள் அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.