- தஞ்சாவூா் அருகே ஆற்றங்கரையில் ஒதுங்கிய தி.மு.க. பிரமுகர் உடல்
தவறி விழுந்து இறந்தாரா? போலீசார் விசாரணை.
தஞ்சை அருகே சூரக்கோட்டை புது ஆற்றங்கரையில் இன்று காலை ஆண் உடல் கரை ஒதுங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் தஞ்சாவூா் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் கணேசன், சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில் இறந்தவர் தஞ்சாவூர் வண்டிக்கார தெரு வெங்கடாசலப் பெருமாள் கோவில் சன்னதி தெருவை சேர்ந்த அசோகன் (வயது 62) என்பதும், தி.மு.க. பிரமுகர் என்பதும் தெரியவந்தது.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/in-setubavasatram-panchayat-union-36-panchayats-were-provided-with-sports-equipment-worth-rs-27-lakh/
மேலும் நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறி சென்ற அசோகன் இன்று ஆற்றில் பிணமாக கரை ஒதுங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அசோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆற்றில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு அசோகன் இறந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.