ஆந்திராவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல்கடலோர மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது

2 Min Read

தமிழகத்தின் தலைநகரான முற்றிலுமாக புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் (மைச்சாங் புயல்) , செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆந்திரப் பிரதேசத்தின் பாபட்லா அருகே கரையைக் கடந்தது . இதன் விளைவாக ஆந்திர மாநில கடலோர மாவட்டங்களில் பெரும் சேதத்தை விட்டு சென்றுள்ளது .

- Advertisement -
Ad imageAd image

நேற்று மதியம் முதல் அங்கு பெய்த பலத்த மழையின் காரணமாக விளைந்த பயிர்களுக்கு விரிவான சேதத்தை ஏற்படுத்தியது மேலும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு முற்றிலுமாக சீர்குலைத்தது.

ஆந்திராவின் கடலோர மாவட்டங்ககளில் மணிக்கு 90 கிமீ முதல் 110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது, மேலும் புயல் படிப்படியாக வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சித்தூர், நெல்லூர், பிரகாசம், குண்டூர், பாபட்லா மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது . மேற்கு கோதாவரி மற்றும் கோனாசீமா மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது.

கடலோரப் பகுதிகளில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும், அவற்றை அகற்றும் பணியில் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன.

புயல் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாபட்லாவில் மட்டும் 50 சிறப்புக் குழுக்களை மாநில அரசு தயார் நிலையில் நிறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாபட்லா மாவட்டத்தில் 1,350 பேர் 27 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பாபட்லா மாவட்ட ஆட்சியர் பி ரஞ்சித் பாஷா, புயலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ள 111 கிராமங்களுக்கு நேசென்று மீட்பு பணிகளை துரித படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதனிடையே, வேளாண் துறை அதிகாரிகள் அவர்களது சார்பில் பயிர் சேதங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ரெபள்ளே, வெமுரு, பாபட்லா, நிஜாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். குண்டூர் மாவட்டத்தில் உள்ள சூர்யலங்காவில் கடல் சீற்றமாக மாறியது, 2 மீட்டர் உயர அலைகள் கரையை தாக்கின.

புயலின் தாக்கம் காரணமாக, பாபட்லா, ரேபள்ளே, நிஜாம்பட்டினம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளிலும் சில மீட்டர்கள் கடல் கொந்தளிப்பாக இருந்ததாக வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரிகள் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மற்றும் ராயலசீமா பகுதிகளில் கனமழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை 97,000 டன் நெல் கொள்முதல் செய்தது, அதே நேரத்தில் 650,000 டன் பாதுகாப்பான சேமிப்பு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. எட்டு மாவட்டங்களில் ஐந்து NDRF மற்றும் ஐந்து SDRF குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு திரும்பும் போது ₹2,500 மற்றும் வாழ்வாதார இழப்பை ஈடுசெய்ய தனிநபர்களுக்கு ₹1,000 வழங்கப்படும்.

நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி, பருப்பு, பாமாயில், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவையும் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது .

Share This Article

Leave a Reply