Custodial Death : காவலர் சித்திரவதையால் டாஸ்மாக் கேன்டீன் ஊழியர் மரணம் – விழுப்புரம் SP தலை குனிய வேண்டும் !

2 Min Read

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நீதியை வழங்கு வேண்டி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இன்று விழுப்புரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு .

- Advertisement -
Ad imageAd image

உயர் நீதிமன்றம் உத்ரவின்படி காவல் சித்திரவதையால் மரணம் அடைந்த ராஜாவின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும் மற்றும் பாதிக்கபட்ட குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் சாந்தி நிலையத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை ஒருங்கிணைத்தனர்.

விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவை சேர்ந்தவர் ராஜா வயது (43) இவர் விழுப்புரத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கேன்டீன் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார் .  கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று விழுப்புரம் திருப்பாச்சாவடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக விழுப்புரம் தாலுகா காவல் நிலைய துணை காவல் ஆய்வாளரால் கைது செய்யப்பட்ட ராஜா , பின்பு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு

இந்நிலையில் வீட்டிற்கு வந்த ராஜா நெஞ்சு வலிப்பதாக கூறி மயங்கி விழுந்துள்ளார் . அவரை மருத்துவமனை கொண்டு பரிசோதித்த போது ராஜா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் குறித்து பல்வேறு பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகளில் வந்த செய்திகள் அடிப்படையில் மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் சார்பில் கள ஆய்வு செய்ததில் போலீசார் அடித்ததால் தான் ராஜா இறந்துள்ளார் என்பதை கண்டறிந்து ,

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர் .

சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு விசாரணைக்கு பின்பு ராஜா மரணத்தில் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உறுதி செய்தது.

மனித உரிமை செயற்பாட்டாளர்களின் பத்திரிகையாளர் சந்திப்பு

* மேலும் வரும் எட்டு நாட்களுக்குள் ராஜாவின் உடலை தோண்டி எடுத்து மீண்டும் உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

* உடலை முழுமையாக ஸ்கேன் செய்ய வேண்டும்.

* Crpc 176 I (A) பிரிவில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற நடுவர் விசாரணை செய்ய வேண்டும்.

* சென்னை மற்றும் திருச்சி மருத்துவக் கல்லூரியிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் வரவழைத்து உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

* தாலூகா காவல் நிலையம், அரசு மருத்துவமனைகளில் 10ம் தேதி காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை பதிவான வீடியோ பதிவுகளை உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட காவல் துறைக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார் .

இறந்த ராஜா வயது (43)

மேலும் இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு மாநில அளவிலான மனித உரிமை செயற்பாட்டாளர்கள் விழுப்புரத்தில் இன்று ஒருங்கிணைத்தனர் . இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மக்கள் கண்காணிப்பகம் மாநில ஒருங்கிணைப்பாளர் இ.ஆசீர்வாதம், மக்கள் பாதுகாப்புக் கழகத் தலைவர் பி.வி ரமேஷ், மனித உரிமை கூட்டமைப்பு கோ. சுகுமாறன், கலப்பு திருமண தம்பதிகள் சங்கத் தலைவர் ஆ.பாலமுருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் இறந்த ராஜாவிற்கு அஞ்சு என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது .

Share This Article

Leave a Reply