முத்துப்பேட்டை அருகே கொடூரம் : சொத்துக்காக மூதாட்டியை 6 வருடமாக பூட்டிய வீட்டில் சிறை..!

3 Min Read

முத்துப்பேட்டை அருகே கொடூரம். சொத்துக்காக மூதாட்டியை 6 வருடமாக பூட்டிய வீட்டில் சிறைவைக்கப்பட்ட சம்பவம். மம்மி போன்று உடல் மெலிந்து உயிருக்கு போராடும் பரிதாபம். வீடியோ வைரலால் பரபரப்பு. பின்வருமாறு;-

- Advertisement -
Ad imageAd image

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் மேலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பழனித்துரை மனைவி ஜெயம். இவர் 65 வயது மூதாட்டியான இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரது கணவர் 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் மட்டும் தனது வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு வீட்டுடன் உள்ள கோவில் சொத்தும் வேறு இடங்களில் சில நிலங்களும் உள்ளன என கூறப்படுகிறது.

சொத்துக்காக மூதாட்டியை 6 வருடமாக பூட்டிய வீட்டில் சிறை

இந்த நிலையில் வாரிசுகள் யாரும் இல்லாததால் இவரின் சொத்துக்களுக்கு மேல் ஆசைப்பட்ட உறவினர்கள் சிலர் உணவு கொடுத்து இவரை பராமரிப்பு போன்று இருந்து வந்துள்ளனர். இதனிடையே சுமார் 6 வருடங்களுக்கு முன்பு மூதாட்டி ஜெயம் எங்கும் செல்லாத வகையில் அவரை பராமரித்து வந்த அவரது உறவினர் ஒருவர் மூதாட்டி ஜெயத்தை உள்ளே வைத்து வீட்டை பூட்டி சிறை வைத்து விட்டு, ஜன்னல் வழியாக சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.

இப்படி 6 வருடங்கள் கடந்த நிலையில் மின்சாரம் இல்லாமல் குடிநீர் வசதி ஏதுமில்லாமல் ஜன்னல் வெளிச்சத்தில் பூட்டிய வீட்டில் அடைக்கப்பட்டதால் சரியான உணவு இல்லாமல் உடம்பில் உடை இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு அங்கேயே இயற்கை உபாதைகளை கழித்தும் அதே இடத்தில் உறங்கியும் போதிய பராமரிப்பு இல்லாமலும் ஜெயம் உடல் மெலிந்து மம்மி போன்று காணப்படுகிறார். மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றமும் கடுமையாக வீசி வருகிறது.

மூதாட்டி மம்மி போன்று உடல் மெலிந்து உயிருக்கு போராடும் பரிதாபம்

இதுகுறித்து சுற்று பகுதியில் வசிக்கும் மக்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டல் அவர்களை மூதாட்டியை அடைத்து வைத்திருக்கும் நபர் மிரட்டும் தோணியில் பேசியதால், இதற்கு பயந்து வெளியில் சொல்லாமல் நமக்கு ஏன் வம்பு என சுமார் 6 வருடமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் அந்த பகுதியை கடந்தாலே துர்நாற்றம் வீசி வருவதாலும் அந்த மூதாட்டி தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதால் இதைக்கண்ட சிலர் இந்த மூதாட்டியை வீடியோ எடுத்து சமூக வலைத்தளகளில் பரப்பி விட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வைரவமூர்த்தி என்பவர் கூறுகையில்;- பாவமுங்க இந்த மூதாட்டி.. நல்லா வாழ்ந்தவங்க.. கௌரவமான குடும்பத்தை சேர்ந்தவர்.. இவருக்கு குழந்தைகள் இல்லை கணவரும் இறந்து விட்டார். தனியாக இருந்த இவரின் சொத்துக்களை அபகரிக்க பராமரிப்பு போன்று சுமார் 6 வருடமாக வீட்டை பூட்டி வைத்து சிறை வைத்துள்ளார்.

முத்துப்பேட்டை காவல் நிலையம்

தினமும் ஒரு வேலை சாப்பாடு கொடுத்தார். இப்ப எப்பாவது தான் சாப்பாடு கொடுக்கிறார். இவர் குளித்து பல வருடம் இருக்கும் இந்த நிலையை பார்த்து நாங்கள் இருக்க முடியவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி முதல் லோக்கல் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு சென்றுவிட்டோம். எந்த நடவடிக்கையும் இல்லை. கடைசியாக தமிழக அரசின் சைல்டு லைன் 14567 நம்பருக்கும் தகவல் கூறினேன். எந்த நடவடிக்கையும் இல்லை.

பின்னர் போலீசார் அதிகாரிகள் என அனைவரையும் சிறை வைத்த நபர் கவனித்து விட்டார் என்றார் ஆதங்கமாக இதுபோன்ற செயல் வெளிநாடுகளில் வெளி மாநிலங்களின் நடந்து இருப்பதை சமூக வலைத்தளத்தில் பார்த்து இருப்போம். ஆனால் இன்று நாங்கள் நேரடியாக பார்க்கும் போது மனதை பதற வைக்கிறது என வீடியோக்களை பார்த்த முத்துப்பேட்டை பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

Share This Article

Leave a Reply