அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்துங்க நல்லூர் கிராமத்தில் இரவு சாலை ஓரம் உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 12 அடி நீளம் உள்ள முதலை இருப்பதைக் கண்ட விவசாயி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அப்பகுதி மக்கள் அச்சத்தின் காரணமாக முதலையால். இரவு நேரத்தில் ஆடு, மாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் முதலையை பிடித்து கட்டி வைத்தனர்.பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் முதலையை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் கட்டி கொள்ளிடம் ஆற்றில் விட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.