ஆபத்தை உணராமல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்-ஆபத்தான மேம்பாலம்

2 Min Read
ஆபத்தான மேம்பாலம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆபத்தை எதிர்நோக்கி இருக்கும் மேம்பாலம். முறையான கட்டமைப்பு இல்லாததால் பாலத்தை அறுத்துக் கொண்டு ஓடும் தண்ணீர். ஆபத்தை உணராமல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மிக முக்கியமான சாலைகளில் ஒன்று விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை. பல ஆண்டுகளாக பழுதுடனே இந்த சாலை செயல்பட்டு வந்தாலும் தற்போது நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணியும் ஆரம்பித்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.பணிகள் ஆமை வேகத்தில் தான் செல்லுகிறது.இதனால் இந்த பகுதில் செல்ல யாரும் விரும்புவதில்லை,ஆனாலும் பலர் இத வழியாகத்தான் செல்லுகிறார்கள்.

 

ஆபத்தான பாலம்

இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆணைக்கவுண்டன் குச்சிப்பாளையம் என்கிற இடத்தில் இரு வழி சாலைகளிலும் மேம்பாலம் கட்டப்பட்டது. தரம் இல்லாமல் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் ஆபத்தான நிலையில் தற்போது உள்ளது.

மேம்பாலத்தின் கீழே மலட்டாறு ஓடுவதற்கு வசதியாக மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மலட்டாறு மேம்பாலத்திற்கு உள்ளே செல்லாமல் தரம் இல்லாமல் போடப்பட்ட அஸ்திவாரத்திற்கு கீழே தண்ணீர் புகுந்து வெளியே செல்வது தான் ஆபத்திற்கு காரணம்.இப்படியே தண்ணீர் சென்றால் விரைவில் பாலம் வலுவிழந்து போகும் என்பது சாதாரணமானவர்களுக்கெ தெரியும்.

தரமில்லாமல் தரைதளம் அமைத்ததன் விளைவு தண்ணீர் மாற்று பாதையில் செல்வதோடு பாலத்தின் உறுதித் தன்மையை மேலும் கேள்விக்குறியாக்குகிறது. சாதாரண மழைக்கே இப்படி என்றால் எதிர்வரும் பருவ மழையை எப்படி எதிர்கொள்ள போகிறதோ இந்த பாலம். பருவமழைக்குள் பாலத்தை சரி செய்யாவிட்டால் பெரும் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்கிறார்கள் இந்த பகுதி மக்கள்.

பாலம்

பல மாதங்களுக்கு முன்பு இந்த நிலையை குறித்து பாலம் அமைத்த ஒப்பந்ததாரர்களிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது ஏதோ சில மணல் மூட்டைகளை போட்டு அடைத்து சரியாகி விட்டது என்று சென்றிருக்கிறார் ஒப்பந்ததாரர். மீண்டும் மழை பெய்தவுடன் போடப்பட்ட மணல் முட்டைகள் எல்லாம் அடித்துச் சென்று மீண்டும் அதே ஆபத்தான நிலையிலே அமைந்துள்ளது இந்த பாலம்.
உடனடியாக இந்த பாலத்தை சீரமைக்கா விட்டால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரமில்லை இந்த தேசிய நெடுஞ்சாலை.

பாலத்தை பாதுகாக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.எத்தனையோ முறை முறையிட்டம் அப்படியே இருக்கிறது நெடுஞ்சாலைத்துறை.இந்த நெடுங்சாலை துண்டித்தால் சுமார் 30 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்.இருந்தும் அப்படியே இருக்கிறார்கள் என்கின்றனர் அந்த பகுதி மக்கள்.

Share This Article

Leave a Reply