RDO வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை..

1 Min Read
ஆர்டிஓ வாகனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் கட்ட நிலம் வழங்கியவர்களுக்கு சுமார் 21 ஆண்டுகள் கழித்தும் உரிய இழப்பீடு வழங்காததால் RDO வாகனத்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டு நீதிமன்றம் அதிரடி  நடவடிக்கை……..

- Advertisement -
Ad imageAd image

ஜப்தி செய்ய நோட்டீஸ் ஒட்டப்பட்ட நிலையில் வாகனத்தின் சாவியை கொடுக்காததால் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் நீதிமன்ற ஊழியர்கள் தினரினர்……….

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஜெய் பீம் நகரைச் சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான 27 சென்ட் நிலத்தை மாவட்ட நிர்வாகம் 1999-ம் ஆண்டு ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு கட்டடங்கள் கட்டுவதற்கு அண்ணாமலையின் நிலத்தை ஆர்ஜிதப்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு நிலத்திற்கான மதிப்பீடு நிர்ணயம் செய்ய அண்ணாமலையால் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

ஆட்சியர் அலுவலகம்

இந்த நிலையில் அண்ணாமலை உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய வாரிசுதாரர்களான இரண்டு மகள்கள் மற்றும் ஆறு மகன்கள் சேர்க்கப்பட்டு வழக்கு நடத்து வந்த நிலையில் நவம்பர் 2021-ம் ஆண்டு அண்ணாமலையின் வாரிசுதாரர்களுக்கு வட்டியுடன் சேர்த்து 44 லட்சத்து 15 ஆயிரத்து 242 இழப்பீடைய் வழங்க நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

சுமார் ஒன்றை ஆண்டுகள் ஆகியும் உரிய இழப்பீடை அண்ணாமலையின் வாரிசுதாரர்களுக்கு வழங்காததால் மீண்டும் அண்ணாமலை வாரிசுதாரர்கள் நீதிமன்றத்தை நாடியதை தொடர்ந்து RDO வாகனத்தை ஜப்தி செய்ய நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து நீதிமன்ற ஊழியர்கள் RDO வாகனத்தில் ஜப்தி செய்ததற்கான நோட்டீசை ஒட்டினர்.

நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை ஒட்டிய பின்னரும் வாகனத்தின் சாவியை ஒப்படைக்காததால் நீதிமன்ற ஊழியர்கள் வாகனத்தை எடுத்துச் செல்ல முடியாமல் திணறினார்.

Share This Article

Leave a Reply