திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது டாஸ்மாக்கில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது-முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

2 Min Read
சிவி சண்முகம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்ற பிறகு கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி 24 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராயம் ஒரு பக்கம் விற்பனை செய்யப்பட்டாலும் அரசு மதுபான கடைகளில் கலர் சாராயங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உயிர் இழப்பு ஏற்படும் என்று நான் கூறியிருந்தேன். நான் கூறிய 24 மணி நேரத்தில் தஞ்சாவூரில் அரசு மதுபான கடையில் மது அருந்திய இருவர் உயிரிழந்தனர். அதனை உடனடியாக மூடி மறைப்பதற்காக உடற்கூறு ஆய்வு செய்வதற்கு முன்பாகவே போலீசார் அவர்கள் சைனைட் சாப்பிட்டு இருந்தார்கள் என்று அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.
அதற்கு அடுத்ததாக இன்று செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி மதுரை அருகே கிடாரிப்பட்டி என்கிற இடத்தில் டாஸ்மாக் மதுபான கடையில் மது அருந்திய கோயில் பூசாரி அவரது நண்பர் மேலும் 16 வயது சிறுவன் ஆகியோர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி சேர்க்கப்பட்ட நபர்களில் கோயில் பூசாரி உயிரிழந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது.

- Advertisement -
Ad imageAd image
திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது டாஸ்மாக்கில் போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது-முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்.

இதுவரை கள்ளச்சாராயம் அருந்தி 25 பேரும் அரசு மதுபானக் கடையிலே மது அருந்தியவர்கள் மூன்று பேர் என உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. மதுபான நிறுவனங்களில் இருந்து கணக்கில் வராமல் கலர் சாராயங்கள் கொண்டு வந்து டாஸ்மாக் கடையில் விற்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படும். இதை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் நான் சொன்னதாக ஒரு தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவர் முழுமையாக நான் சொன்ன தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ளவும். அவருக்கு அந்த காணொளியை இன்று அனுப்பி இருக்கிறேன். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி சூரையாடப்பட்ட சம்பவத்திற்கு உளவுத்துறை கொடுத்துள்ள அறிக்கையில் இரு சமுதாயத்தினர் தான் இந்த தாக்குதலுக்கு காரணமானவர் என்று அகமுடையார் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீது உளவுத்துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. அப்பாவி இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டு அவர்களை விடுவிக்க கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டங்கள் நடத்தியும் கூட அவர்களை விடுவிக்கவில்லை. மேலும் திமுக அமைச்சர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி தவறுதலுக்கு விசிக முட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோன்று வேங்கைவயல் சம்பவத்தில் திமுக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. நீதி அரசர் சத்யநாராயணா தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு அவர்கள் தான் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். என்று செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்தார்

Share This Article

Leave a Reply