நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பசுமாட்டை தாக்கிய சிறுத்தை தொடரும் சிறுத்தை தாக்குதல் அச்சத்தில் கூடலூர் பகுதி மக்கள்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவதோடு மனிதர்களையும் தாக்கி வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் இதுவரை 5-க்கும் மேற்பட்டோரை சிறுத்தை தாக்கியதில் இரண்டு பேர் இறந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதி முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள பகுதியின் அருகே உள்ளது. இதனால் புலி, சிறுத்தை, கரடிகள், யானைகள், மான்கள் ஆகியவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி, உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளின் அருகே சுற்றித்திரிவது வாடிக்கையாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் சிறுத்தைகளின் எண்ணிக்கை வனப்பகுதியில் அதிகரித்துள்ளதால், கூடலூர், குன்னூர், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள பந்தலூர் கோமுலா பகுதியில் நேற்று தேவராஜ் என்பவரது பசுமாட்டை சிறுத்தை தாக்கிக் கொன்றது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்த பசு மாட்டின் உரிமையாளருக்கு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். ஏற்கனவே பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தையின் அட்டகாசம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவோ, அல்லது சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால், சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து வேறு பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் வனத்துறையினர், பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அப்போது மயக்க ஊசி செலுத்தி, சிறுத்தையை பிடித்து வேறு பகுதியில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என முதுமலை புலிகள் காப்பகம் உறுதி அளித்தார். இதனிடையே சிறுத்தையை பிடிப்பதற்காக 25 குழுக்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 5 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முதுமலை வனப்பகுதியில் விடப்பட இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதுவரை 25 வயது பெண் மற்றும் 3 வயது குழந்தை சிறுத்தை தாக்கி இறந்த சம்பவத்தால் கூடலூர் பகுதியில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று பசுமாட்டை சிறுத்தை தாக்கியது. மேலும் கூடலூர் பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.