புதுச்சேரி லாஸ்பேட்டையில் உழவர்கரை நகராட்சி சார்பில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10%உள் இடஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் இதில் உள்ள நிர்வாக ரீதியாறன சிக்கல்களை களைந்து இந்த வருடத்திற்குள் அதற்கான அனுமதியை பெறவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவே புதிய திட்டங்களை அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த தமிழிசை,புதுச்சேரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் பணியாற்றி வருகிறேன். இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்.புதுச்சேரி மக்கள் மீதுள்ள அன்பால் நான் எனது பணியை செய்து வருகிறேன்.
எதிர்காலத்தில் தேர்தலில் போட்டியிடுவது ஆளுபவர்கள் கையிலும், ஆண்டவன் கையிலும் உள்ளது. தற்போது ஆளுநராக எனது பணியை நான் செய்து வருகிறேன் என்றும்,
மணிப்பூர் விவகாரம் மிகவும் கவலை அளிக்கிறது. பெண்களை பாலியல் துன்புறுத்தலை ஆளாக்கியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடக்க கூடாது இதன் மீது பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.