தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே இளைஞரை கொன்ற வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டினை சுற்றி, ஏராளமான எலும்புகள் இருப்பதால் போலீசார் அதிர்ச்சி. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் உண்மை தெரியும் என்பதால், அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் மணல்மேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடைய மகன் அசோக் ராஜன். சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த அசோக் ராஜன், தீபாவளிக்கு ஊருக்கு வந்துள்ளார். அதன்பிறகு அவரை காணவில்லை.
இதுகுறித்து அசோக் ராஜன் குடும்பத்தினர் சோழபுரம் போலீஸாரிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரித்த போது, அசோக் ராஜனுடன் சித்த வைத்தியரான கேசவமூர்த்தி வயது (47) என்பவர் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரியவந்தது. அவர் தான் அடிக்கடி அசோக் ராஜனுடன் பேசியவர் என்பதால் அவரை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, அசோக் ராஜனை அவர் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்தாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், உடனடியாக சித்த வைத்தியர் கேசவமூர்த்தியை கைது செய்து விசாரித்தனர்.

இது மட்டுமல்லாமல் வேறு சில சம்பபவங்களையும் செய்துள்ளார். கேசவமூர்த்தி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்ற நாட்டு வைத்தியர். இரு இளைஞர்களை கொடூரமான முறையில் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைகள் குறித்து கேசவமூர்த்தி அளித்த வாக்கு மூலத்தை செய்திக்குறிப்பாக காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், “என்னுடன் ஓர் பாலின சேர்க்கை தொடர்பிலிருந்த அசோக் ராஜன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். எனவே ஆத்திரமடைந்து அவரை கொன்றேன். இதேபோல என்னுடன் தொடர்பில் இருந்த முகமது அனஸ் என்ற இளைஞரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார். எனவே கோபத்தில் அவரையும் கொன்றேன்” என்று வைத்தியர் கேசவமூர்த்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இருவரையும் கொன்று வீட்டிற்குள்ளேயே அந்த வைத்தியர் புதைத்த நிலையில் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஆடு வெட்டும் கத்திகள், கட்டர், மருத்துவர்கள் பயன்படுத்தும் பிளேடுகள், கத்திரிக்கோல், கையுறை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.