கோவை மாவட்டம், சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அவசர நிலை பிரகடனம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
அதில் பாஜக மாநில துணைத்தலைவர் கனகசபாபதி கலந்து கொண்டு அவசர நிலை பிரகடனம் பற்றியும் அப்போதைய சூழல் எப்படி இருக்கும் எனவும் பாஜக தொண்டர்களிடம் எடுத்துரைத்தார்.
அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி ஒரு குடும்ப கட்சி எனவும், அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இந்திரா காந்தி முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டதாகவும் தனக்கு வேண்டியவர்களை மட்டுமே நீதிமன்றம் உள்ளிட்ட அரசாங்க பொறுப்புகளில் அமர்த்தியதாக தெரிவித்தார்.
ஆட்சி மற்றும் கட்சி என அனைத்தையும் இந்திராகாந்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், அப்போது இந்திரா காந்தியின் மீது போடப்பட்ட வழக்கில் இந்திரா காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்ததாகவும் அது இந்திராகாந்திக்கு பிடிக்காமல் போனதாக தெரிவித்தார்.

மேலும் அவசர நிலை பிரகடனம் என்பது அமைச்சர்களுக்கு அடுத்த நாள் பத்திரிகைகளில் வந்த செய்தியை பார்த்த பின்பு தான் தெரியவந்தது என்றார். அவசர நிலை இருந்த போது தனிமனித உரிமை என யாரும் நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாது எனவும்,
அப்போது எதிர்க்கட்சிகள் உட்பட ஒரு லட்சத்து முப்பது பேர் கைது செய்யப்பட்டார்கள் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜனசங்கம் அமைப்பினர் ஆவர் என தெரிவித்தார்.

அன்றைய தினம் பல்வேறு கொடுமைகள் எல்லாம் நிகழ்த்தப்பட்டதாகவும், நாடு முழுவதும் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள் கைதானவர்களிடம் கற்பனை கூட செய்ய முடியாத கொடுமைகள் எல்லாம் நிகழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.
பின்னர் 1970-களில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டங்களை முன்னெடுத்ததாகவும், அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியினர் செய்ததற்கு எல்லாம் எதிர்த்து குரல் எழுப்பியவர்கள் பாஜகவினராகிய நாம் தான் என தெரிவித்த அவர், இது குறித்து தற்பொழுது உள்ள இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.