ஆந்திர மாநிலம் விஜயவாடா மத்திய தொகுதியில் சுவரில் ஒட்டியிருந்த முதல்-மந்திரியின் ஸ்டிக்கரை கடித்த நாயை கைது செய்ய கோரி பெண்கள் சிலர் திரண்டு போலீசில் புகார் அளித்தது பரபரப்பு ஏற்படுத்தியது.
முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கரை சுவரில் இருந்து கிழித்த நாய் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்கு அடுத்த ஆண்டு (2024) சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளதால் அங்கு தேர்தலுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களை தயார் செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் YSR காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியின் உருவப்படம் அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்கள் ஆங்காங்கே இருக்கும் கடைகள், வீடுகள் உள்ளிட்ட சுவர்களில் அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி வருகின்றனர். அந்த வகையில் அங்குள்ள ஸ்ரீகாகுளம் நகர் என்ற பகுதியில் ஜெகன் மோகனின் உருவம் பதிந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த ஸ்டிக்கரை நாய் ஒன்று தனது வாயால் கிழித்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலரது கவனத்திலும் சேர்ந்தது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் நாய்க்கும், அதன் நிர்வாகிக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.