மக்கள் பணிகளை செய்ய தலைவர் தயாராக இருக்கிற நிலையில் அவர்களுக்கு ஆணையர் சுரேந்திர ஷா மற்றும் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கான அடிப்படை பணிகள் தடைபடுகிறது .
விழுப்புரம் நகராட்சி ஆணையர் மீது அடுக்கடுக்காக குற்றசாட்டுகளை எடுத்து வைத்த கவுன்சிலர்களால் , நகராட்சி கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது .
விழுப்புரம் நகரமன்ற கூட்டம் நேற்று மாலை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாதந்தோறும் நகரமன்ற கூட்டம் நடத்த வேண்டும் , நகராட்சியுடன் புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்பே இல்லை. ஆனால் இருக்கிற மாதிரி வரிகட்ட சொல்லி தொடர்ந்து பொது மக்களுக்கு நோட்டீசு அனுப்பப்படுகிறது மேலும் கந்துவட்டி வசூல் செய்வதுபோன்று அதிகாரிகள் மக்களிடம் வரி வசூலில் ஈடுபட்டுவருகின்றனர் என நகராட்சி நிர்வகித்து மீது அணைத்து நகர மன்ற உறுப்பினர்களும் புகார் தெரிவித்தனர் .

இதில் குறிப்பாக விழுப்புரம் நகரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை விரிவாக்க பணியின்போது அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும்.
ஓராண்டாகியும் 1-வது வார்டில் குடிநீர் வசதி, பாதாள சாக்கடை வசதி, அங்கன்வாடி, ரேஷன் கடை, கருமகாரிய கொட்டகை இப்படி எந்தவொரு அடிப்படை பணிகளும் செய்து தரப்படவில்லை. அ.தி.மு.க. வார்டு என்பதால் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர் .
மேலும் அவர்கள் பேசும் பொது ‘நகரமன்ற கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை. அதுபோல் மக்கள் பணிகளை செய்ய தலைவர் தயாராக இருக்கிற நிலையில் அவர்களுக்கு ஆணையர் சுரேந்திர ஷா மற்றும் அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இதனால் வார்டுகளில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்களுக்கான அடிப்படை பணிகள் தடைபடுகிறது’ என்று சரமாரியாக குற்றம்சாட்டினர். இதனால் நகர மன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு நிலவியது .
இதை கேட்டறிந்த நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, கவுன்சிலர்கள் தெரிவித்த அனைத்து கோரிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார்.
முன்னதாக, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் விழுப்புரம் நகராட்சியை சிறப்புநிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை அமைச்சர், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.