சின்னத்திரை நகைச்சுவையில் கலக்கி வந்த் கோவை குணா (வயது 57) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான கோவை குணா திரைப்பட நடிகர்கள் கவுண்டமணி, சிவாஜி, ராதாரவி எம்ஜிஆர் ரஜினி உள்ளிட்டோரின் குரல்களை மிமிக்ரி செய்து ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான குணா ‘சென்னை காதல்’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார் கோவை குணா.

சமீபத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின். இறுதிச் சடங்கில் குணா பங்கெடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவு சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து தமிழ் திரை உலகில் பல்வேறு சாதனைப்படைத்து மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகர் விவேக், மயில்சாமி, வடிவேல் பாலாஜி ஆகியோரை தொடர்ந்து கோவை குணாவின் மரணம் கலைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .



Leave a Reply
You must be logged in to post a comment.