சென்னை மாணவியின் தற்கொலைக்கு காரணமான மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது.

3 Min Read
போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்

சென்னை எழு கிணறு போர்ச்சுகீசியர் சர்ச் தெருவை சேர்ந்தவர் மகாலட்சுமி 20 வயதாகும் இவர் அண்ணா நகரில் உள்ள மகளிர் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த இரண்டாம் தேதி அதிகாலை தனது வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகாலட்சுமியின் தாய் சாந்தி முத்தையால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் மாணவி அடிக்கடி ஆன்லைனில் கேம் விளையாடுவார், இதனால் பணத்தையும் இழந்து உள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
இணை ஆணையர் ரம்யா பாரதி‌

அதனால் தான் அவர் தற்கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
தற்கொலை செய்து கொண்டவர் கல்லூரி கல்லூரி மாணவி என்பதாலும் ஆன்லைனில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதாலும் அவரது மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் இந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யுங்கள் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்  இணை ஆணையர் ரம்யா பாரதியை கேட்டுக்கொண்டார்.
இணையானையர் ரம்யா பாரதி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில் இறந்து போன மாணவி சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் மகா என்ற பெயரில் கணக்கை உபயோகித்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது மேலும் மகாலட்சுமியின் instagram பக்கத்தில் “ஐ ஆம் அட்விக கபூர்” என்ற கணக்கில் இருந்து செய்தி அனுப்பிய நபர்கள் தாங்கள் வியாபாரிகள் என்றும், கிரிப்டோவில் 750 முதலீடு செய்தால் 23 ஆயிரத்து 530 ரூபாய் திரும்ப கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகளை மகாலட்சுமிக்கு செய்தியாக அனுப்பி உள்ளனர். அவர்கள் கூறியதை நம்பி அவர்களுடன் மகாலட்சுமி தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதை அடுத்து அந்த நபர்கள் கொடுத்த கூகுள் பே கணக்கிற்கு 38,430 ரூபாய் அனுப்பியுள்ளார். அப்போது அவர்கள் இரட்டிப்பாக பணம் தருவதாக வாக்குறுதி அளித்தனர். ஆனால் சொன்னபடி பணத்தை அனுப்பாததால் அனுப்பிய பணத்தை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என்று மகாலட்சுமி கூறியுள்ளார்.
ஆனாலும் குற்றவாளி இடம் இருந்து திரும்ப பதில் கிடைக்காத நிலையில் மோசடிக்காரர்கள் மீண்டும் மகாலட்சுமியை தொடர்பு கொண்டு பணம் அனுப்ப வற்புறுத்தியதால் மகாலட்சுமி நீங்கள் பணம் அனுப்பவில்லை எனில் எனக்கு தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கூறி செய்தி அனுப்பி உள்ளார் அதேபோன்று கடந்த இரண்டாம் தேதி அதிகாலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் google pay என்னை கொண்டு விசாரணையை முடுக்கிவிட்டனர் குற்றவாளிகள் கொல்கத்தாவில் இருந்து இயங்கி வருவது தெரியவந்தது அதன் பெயரில் மோசடியில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது இது குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உடனடியாக குற்றவாளிகளை பிடித்து விசாரிக்க உத்தரவிட்டார். இதனால் தனிப்பட்டனர் கொல்கத்தா சென்று அங்க முகாமிட்டு இன்ஸ்டாகிராம் மோசடிக்கு பெயர் பெற்ற “கிதாப்பூர்” “ஏக்பால்பூர்” ஆகிய இடங்கள் பெயர் பெற்றது என தெரியவந்து தங்களிடம் கிடைத்த செல்போன் எண், வங்கி கணக்கு, பணப்பரிவர்த்தனை ஆகிய விபரங்களை எடுத்து விசாரணையை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக கொல்கத்தாவை சேர்ந்த “ஜாஜூனுதீன்”என்பவரது வங்கி கணக்கை பெற்று அப்பாவி மக்களிடம் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
விசாரணையில் சிக்கிய “முகமது பைசல்”, “முகமது ஆசிப் இக்பால்” ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து மூன்று ஐ போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் லேப்டாப் மற்றும் பத்தாயிரம் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பலரை ஏமாற்றி கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூ 17 லட்சம் வரை பண மோசடி செய்துள்ளதும் தெரிய வந்தது. எனவே மூவரையும் மேற்குவங்க மாநிலம் அலிப்பூர் நீதிமன்றம் நடுவர் முன்பு ஆயர்படுத்தி உரிய சட்ட நடவடிக்கைகளுடன் நீதிமன்ற உத்தரவுப்படி அனுமதி பெற்று மூன்று பேரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் குற்றவாளிகள் மூன்று பேரும் 16 வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Share This Article

Leave a Reply