சகா மாணவியை சுட்டு கொன்ற கல்லூரி மாணவன் தன்னைத்தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் புகழ் பெற்ற சிவ நாடார் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது .
இந்த கல்லூரியில் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்த அனுஜ் வயது 19
என்ற மாணவன் மூன்றாம் ஆண்டு சமூகவியல் படித்து வருகிறார் . அதேபோல் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்த நேஹா சஉரசியா என்ற மாணவியும் மனோஜுடன் படித்து வருகிறார் .
அனுஜ் மற்றும் நேஹா இருவரும் நட்பை தாண்டி இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர் .
நேற்று மதியம் இருவரும் கல்லூரி வளாகத்தில் இருக்கும் உணவு உண்ணும் அறையில் கட்டிப்பிடித்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர் அப்போது அனுஜ் மற்றும் நேஹா இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது .
கண் இமைக்கும் நேரத்தில் அனுஜ் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து நேஹாவை பலமுறை சுட்டுள்ளார் . ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நேஹாவை சக மாணவர்கள் காப்பற்ற முற்பட்டனர் . அப்போது அனுஜ் துப்பாக்கியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்து கல்லூரியில் இருக்கும் அவரது தங்கும் விடுதிக்கு சென்று தாப்பாள் போட்டு கொண்டு , சிறிது நேரத்தில் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

பிறகு கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு அனுஜின் அறை கதவு உடைக்கப்பட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர் . அனால் மருத்துவர்கள் அனுஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் . இதே போல் நேஹாவும் இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அனுஜுக்கு எப்படித் துப்பாக்கி கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
வாழ்க்கையில் வரும் துன்பங்கள் மற்றும் குழப்பங்கள் நிரந்தமானது அல்ல. தற்கொலை முடிவு எதற்கும் தீர்வு ஆகாது. உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோஅல்லது தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – (+91 44 2464 0050, +91 44 2464 0060)
Leave a Reply
You must be logged in to post a comment.