எதற்காக சோதனை நடந்தது கோவை மீனா ஜெயக்குமார் கேள்வி

2 Min Read
அமைச்சர் வேலு

தமிழகத்தில் திருவண்ணாமலை,விழுப்புரம்,கோவை,சென்னை என பல இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.இவை அனைத்தும் அமைச்சர் எ.வ வேலுவிற்க்கு நெருக்கமானவர்கள் இடங்கள்.சோதனையில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

- Advertisement -
Ad imageAd image

இந்த வருமான வரித்துறை ரெய்டு பற்றி மீனா ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
3 நாள்களில் 4 இடங்களில் சோதனையை முடித்த அதிகாரிகள்,தொடர்ச்சியாக நேற்று 6ஆவது நாளாக மீனா ஜெயக்குமார் வீடு,அவரது மகன் ஸ்ரீ ராம் அலுவலகம் மட்டும் சோதனையை தொடர்ந்தனர்.

மீனா

கோவை திமுக பிரமுகர் மீனா வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு. கோவை திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் தொடர்பான இடங்களில் கடந்த 6 நாள்களாக நடைபெற்ற வருமான வரி துறை சோதனை நிறைவு பெற்றது.

அமைச்சர் எ.வ. வேலு தொடர்பான இடங்களில் தொடங்கிய வருமானவரி சோதனை- கோவை திமுக தமிழ் இலக்கிய பகுத்தறிவு பாசறை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் வீடு அவரது மகன் ஸ்ரீ ராம் வீடு,அலுவலகம்,காசா கிராண்ட் அலுவலகம் அதன் முன்னாள் இயக்குனர் செந்தில் குமார் வீடு,கோவை மாமன்ற உறுப்பினர் சாமி வீடு ஆகிய 6 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

அமைச்சர் வேலு மீனா

3 நாள்களில் 4 இடங்களில் சோதனையை முடித்த அதிகாரிகள்,தொடர்ச்சியாக இன்று 6ஆவது நாளாக மீனா ஜெயக்குமார் வீடு,அவரது மகன் ஸ்ரீ ராம் அலுவலகம் மட்டும் சோதனை தொடர்ந்தனர். நவ.8 மாலை 6.30 மணியளவில் சோதனையை முடித்து அதிகாரிகள் சென்றனர்.

இது தொடர்பாக பேட்டியளித்த மீனா ஜெயக்குமார், “இந்த சோதனையில் அதிகாரிகள் எந்த பொருளும், பணமும், ஆவணங்களும் எடுத்து செல்லவில்லை” என்றார்.மேலும், “தேர்தலுக்கான நேரம் இது. தேர்தல் பணிகளை நாங்கள் செய்யாமல் இருக்கவே இது போன்ற சோதனை மேற்கொள்ளப்படுகின்றது.இத்தகைய சோதனைகள் மனவேதனை ஏற்படுத்தினாலும் அதையும் தாண்டி தேர்தல் பணிகளை உற்சாகத்துடன் மேற்கொள்வோம்” என்றார்.மேலும், “தங்களிடம் அனைத்து தகவல்களும் முறைப்படி உள்ளதால் நிச்சயமாக முதல்வர் அவர்களுக்கு பெருமையை சேர்க்கக் கூடிய வகையில் தான் செயல்படுவோம் என்றார்.தொடர்ந்து, “எதற்காக தனது இல்லத்தில் சோதனை நடந்தது என புதிராக உள்ளது” அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும், தனது கணவர் திருவண்ணாமலைக்காரர் என்பதால் அமைச்சர் வேலுவிற்கு பழக்கம் என்றும் மீனா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மீனா ஜெயக்குமார்

மீனா ஜெயக்குமார் ஆலம் விழுதுகள்’ என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

Share This Article

Leave a Reply