கோவை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கோவையில் பெய்த கனமழையால் மழை நீர் தேங்காததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவை மாநகரில் ஒரு மணி நேர பெய்த கனமழைக்கே பாலங்கள், சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.

குறிப்பாக வடகோவை, உப்பிலிபாளையம், கிக்கானி, லங்கா கார்னர் மேம்பாலங்களின் கீழ் மழை நீர் தேங்குவதும், அதில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்கித்தவிப்பதும் தொடர் கதையாக இருந்தது.

இதனிடையே கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மழைநீர் வடிகாலை மேம்படுத்தி, முறைப்படுத்தும் பணியைத் துரிதமாக மேற்கொண்டார். இதனால் கோவையின் முக்கிய இடங்களில் மழை நீர் தேங்காமல், மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடர்கின்றனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.