- சாலையை பெருக்கி சுத்தம் செய்யும் போது இந்த ஹோட்டல்ல நாம சாப்பிட முடியுமானு ஏங்கி பார்த்துட்டு போவோம். ஆனால் இன்று அனைவரோடும் சமமாக உட்கார்ந்து இங்கு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமா இருக்கு என தஞ்சையில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் (கண்ணப்பா) சாப்பிட்டதை மறக்க முடியாத நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர் தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள்.
குப்பைகளுக்கு குட்பை சொல்லுபவர்கள் துப்புரவு பணியாளர்கள், தஞ்சை மாநகராட்சியில் தீபாவளி அன்று சேர்ந்த 500 டன் பட்டாசு குப்பைகளை அகற்றி நகரை சுத்தம் படுத்திய தஞ்சை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கெளரவப்படுத்தும் விதமாகவும், நன்றி செலுத்தும் விதமாகவும் தனியார் தொண்டு நிறுவனம் ஆண், பெண் துப்புரவு பணியாளர்களை வேன் மூலம் தஞ்சையில் உள்ள பிரபல அசைவ உணவகத்திற்கு (கண்ணப்பா) அழைத்து சென்றது.

சந்தோஷத்தில் மிகப்பெரிய சந்தோஷம் அடுத்தவர்களை மகிழ்விப்பது என்ற மொழிக்கு ஏற்ப துப்புரவு பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மட்டன் கோலா உருண்டை, ஃபிஷ் ஃபிங்கர் முட்டை சிக்கன் பிரியாணி ஐஸ்கிரீம் என தடபுடலாக அவர்களுக்கு விருந்து பரிமாறி மகிழ்ச்சியில் திணற வைத்தனர்.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/actor-dhanush-aishwarya-affair-case-the-hearing-of-the-case-was-postponed-as-both-did-not-appear-again/
சாலையை பெருக்கி சுத்தம் செய்யும் பொழுது இந்த கடையை பார்த்து இங்கு வந்து சாப்பிட முடியுமா என ஏக்கத்துடன் பல நாள் சென்றிருக்கிறோம் இன்று எங்களையும் இந்த ஹோட்டலுக்கு அழைத்து வந்து சாப்பிட வைத்து எங்களோடு சமமாக அனைவரும் உணவு சாப்பிட்டது மறக்க முடியாது என உணர்ச்சி பொங்க தெரிவித்தார் தூய்மை பணியாளர் கௌசல்யா.



Leave a Reply
You must be logged in to post a comment.