மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த 2 ஆம் தேதி நடந்தது. நாட்டின், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக பெண்கள் நிறுத்தப்பட்டனர்.
இந்த தேர்தலில், ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளரான கிளாடியா ஷீன்பாம், 61, அதிபரானார். இதன் வாயிலாக, மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு அவர் அதிபராக இருப்பார்.

மெக்சிகோ நகர மேயராக பணியாற்றியுள்ள இவர், மிகச்சிறந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானி. பிரசாரத்தின் போது கடும் போட்டி நிலவிய நிலையில், 58 சதவீத ஓட்டுகளுடன் ஷீன்பாம் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட, ‘பான்’ எனப்படும் தேசிய செயல்பாட்டு கட்சியின் வேட்பாளர் ஜோசில் கால்வஸ், 28 சதவீத ஓட்டுகளை பெற்றார். எம்.சி., எனப்படும் மக்கள் இயக்கம் கட்சியின் ஜார்ஜ் ஆல்வாரிஸ் மேய்னஸ், 10 சதவீத ஓட்டுகளை பெற்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.