+1 Results : வெளியானது +1 தேர்வு முடிவுகள்.

1 Min Read
மாணவிகள்

+1 பொதுத் தேர்வில் மாணவிகள் 7.37% கூடுதல் தேர்ச்சி.

2023ம் கல்வியாண்டிற்கான 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 13 முதல் ஏப். 5-ம் தேதி வரை நடைபெற்ற 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.  இவர்களில் மாணவிகள் 4,15,389 பேரும் மாணவர்கள்  3,61,454 தேர்வுகள் எழுதினர்.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.  இதில் 90/93 சதவிகிதம் மாணவ மாணவிகள்  தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மேலும் குறுஞ்செய்தி மூலமாகவும் முடிவுகளை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவிகள்

பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் , மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளைப் பார்த்துக் கொள்ளசிறப்பு ஏற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளது . பள்ளி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் SMS வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Share This Article

Leave a Reply