ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் – பாஜகவினர் சாலை மறியல்..!

2 Min Read

ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும் ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல். ஓபிஎஸ் அணியினர் மன்னிப்பு கேட்க கோரி கேணிக்கரையில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு.

- Advertisement -
Ad imageAd image

பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழ சின்னத்தில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமையிலான பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இறுதி கட்ட வாக்கு ஈடுபட்டு வரும் ஓபிஎஸ் மாலை உப்பூர் பகுதியில் பிரச்சாரத்தை முடித்து கொண்டார்.

ராமநாதபுரம் ஆர்.எஸ் மடை பகுதியில் ஓபிஎஸ் அணியின் ஒன்றிய செயலாளர் முத்து முருகன் தலைமையில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பலாபழ சின்னம்

ஆர்.எஸ் மடையில் காலதாமதமாகி நேரம் 10 மணி ஆனதால் திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர் தர்மபுரியேசன் ஏற்பாடு செய்திருந்த அர்ச்சுனன் பகுதிக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்த ராமநாதபுரம் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் ஓபிஎஸ் அணியை சேர்ந்த முத்து முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது முத்து முருகன் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசனை தாக்கியதாக சொல்லப்படுகிறது.

ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் – பாஜகவினர் சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் ஓபிஎஸ் அணியச் சேர்ந்த முத்து முருகன் மாவட்டத் தலைவர் தரணி முருகேசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமநாதபுரம் ந கேணிக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள பிரதான சாலையில் சாலை மறியல் செய்வதற்காக பாஜகவினர் குவிந்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துற்கு வந்த போலீசார் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்ட ஆனால் அதனை ஏற்க மறுத்த பாஜகவினர்.

ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் – பாஜகவினர் சாலை மறியல்

முன்னாள் முதல் ஓபிஎஸ்-க்கு எதிராகவும் பலாப்பழச் சின்னத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியவாறு சாலையின் இரு பக்கமும் கூடியிருந்தனர்.

பின்னர் ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த நியமன எம்பி தர்மர் பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ராமநாதபுரத்தில் பாஜகவினருக்கும், ஓபிஎஸ் அணியினருக்கும் இடையே மோதல் – பாஜகவினர் சாலை மறியல்

ஆனால் அந்த பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டபடாததால் பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் மற்றும் எம்பி தர்மர் ஆகியோர் ராமநாதபுரம் மாடக்கொட்டன் பகுதியில் வீடு ஒன்றில் தங்கி உள்ள ஓபிஎஸ்ஐ சந்தித்து பேசினர்.

பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு பாஜகவினர் ஓபிஎஸ்-க்கும், பலாபழ சின்னத்திற்கும் எதிராக கோஷங்கள் எழுப்பியதால் ராமநாதபுரம் மக்களவை தொகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Share This Article

Leave a Reply