கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல் – நடந்தது என்ன..?

3 Min Read
கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. திட்டப்படி எல்லாம் நிறைவேறியதால், தனி அணி அமைப்பதில் அண்ணாமலை தீவிரம் காட்டினார்.

- Advertisement -
Ad imageAd image

ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்தால் தான் கணிசமாக ஓட்டுக்களை பெற முடியும் என்று மேலிடம் கருதியது. இதற்காக கடந்த சில நாட்களாகவே எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு வந்தனர். இதற்காக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, டாக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் மூலம் பேசி வந்தனர்.

கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

அப்போது கூட்டணிக்கு வராவிட்டால் பல முன்னாள் அமைச்சர்கள் சிறை செல்ல நேரிடம் என்றெல்லாம் மிரட்டி பார்த்தனர். ஆனால் இந்த மிரட்டலுக்கு எடப்பாடி பழனிசாமி பணிந்து செல்லவில்லை.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தலைமையிடம் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட பட்டியலை கொடுத்துள்ளார்.

கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

அதில் கூட்டணி கட்சியினர் போட்டியிடும் தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் 3 பேரில் இருந்து ஒருவரை மேலிடம் தேர்வு செய்து அறிவிக்கலாம் என்றார். இந்த பட்டியலை அமித்ஷாவிடம் சென்று கொடுக்கும்படி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

அமித்ஷாவோ, அண்ணாமலையை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு மாநிலத்தில் உள்ள கூட்டணியையே காலி செய்து விட்டீர்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.

கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

அப்போது பட்டியலையும் தூக்கி எறிந்துள்ளார். அதன்பின்னர் நட்டாவிடம் பட்டியலை கொடுத்து விட்டு சென்னை திரும்பி விட்டார் அண்ணாமலை. அந்த பட்டியலில் கோவை தொகுதிக்கு தனது பெயரை சேர்த்துள்ளார்.

இது தெரிந்ததும் வானதி சீனிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுவரை தேர்தலில் போட்டியிடவில்லை. தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யப்போகிறேன் என்றவர், ஏன் திடீரென்று போட்டியிட விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்டுள்ளார்.

கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

அதற்கு அண்ணாமலை, நீங்கள் எம்எல்ஏவாக உள்ளீர்கள். மகளிர் அணியின் தேசிய தலைவராகவும் உள்ளீர்கள். அதனால் எம்பி தேர்தலில் நான் நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

நமது கட்சியில் எம்பி, எம்எல்ஏக்களாக இருப்பவர்கள் கவர்னர், ஒன்றிய அமைச்சர், மாநில அமைச்சர் என மாறி மாறி செல்வது இயற்கை தானே. நெல்லையிலும் நயினார் நாகேந்திரன் தானே போட்டியிடுகிறார்.

கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

அப்படி இருக்கும் போது நான் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது. உங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால், உங்கள் சொந்த ஊரான கரூரில் தானே நிற்க வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அண்ணாமலையோ, செந்தில்பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் நிற்க முடியாது. கோவையில் நின்றால் நல்லது என்று நினைக்கிறார்.

அதேநேரத்தில், அண்ணாமலை நின்றால், மாவட்டச்செயலாளர் மூலம் கீழ் மட்ட நிர்வாகிகள் வரை அவருடைய ஆட்களை கொண்டு வந்து போடுவார். இதனால் தனக்கு ஆதரவாளர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்று வானதி அஞ்சுகிறார்.

பாஜக மேலிடம்

இதனால் தனக்கு தான் சீட வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறார். இதற்காக மோடியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். கோவை சீட் வேண்டும். அமித்ஷாவின் கோபத்தை தணிக்க வேண்டும் என்று ஈஷா யோகா குருவை நேற்று அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

அதேநேரத்தில், தமிழக பட்டியலை தற்போது வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்த மேலிடம், அதிமுக கூட்டணிக்கு ஓரிரு நாள் வரை தொடர்ந்து முயற்சி செய்ய முடிவெடுத்துள்ளது.

கோவை சீட் கேட்டு அண்ணாமலை, வானதி சீனிவாசன் இருவருக்கும் இடையே மோதல்

தொடர்ந்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் யாரும் போட்டியிட விருப்பம் காட்டாததால் கேட்கும் சிலருக்கு வழங்க அண்ணாமாலை முடிவு செய்து அதற்கான பட்டியலை கொடுத்துள்ளார் என்கின்றனர்.

பாஜக நிர்வாகிகள் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதால் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Share This Article

Leave a Reply