தேர்தல் பரப்புரையின் போது அதிமுக, திமுகவினர் இடையே மோதல் – ஒருவருக்கு அரிவாள் வெட்டு..!

2 Min Read

ராஜபாளையம் அருகே அயன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி பாராளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது திமுக அதிமுகவினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு அரிவாள் வெட்டு.

- Advertisement -
Ad imageAd image

காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசி பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடுகிறார்.

அதிமுக

இந்த நிலையில் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான முதுகுடி வெங்காநல்லூர் அயன் கொல்லம் கொண்டான் முகவூர், முத்துசாமிபுரம் உட்பட 25 கிராமங்களுக்கு மேல் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி உடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லம் கொண்டான் கிராமத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

திமுக

இந்த கூட்டத்தில் நின்று கொண்டிருந்த திமுக பிரதிநிதி குருசாமி என்பவரது மகன் சுரேஷ் வயது 32 என்பவர் அதிமுக வேட்பாளர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் பொழுது கூச்சலிட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அது சமயம் அங்கிருந்த அதிமுக மற்றும் புதிய தமிழகம் கட்சியினை சார்ந்தவர்கள் அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளனர். அதை தொடர்ந்து கூச்சலிட்டு வந்த சுரேஷினை சுந்தரலிங்கம் என்பவர் அமைதியாக இருக்கவும் அல்லது கூட்டத்தை விட்டு வெளியேறும் படியும் கூறியுள்ளார்.

தேர்தல் பரப்புரையின் போது அதிமுக, திமுகவினர் இடையே மோதல் – ஒருவருக்கு அரிவாள் வெட்டு

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து சுந்தரலிங்கத்தை வெட்ட முற்பட்ட பொழுது அதனை பார்த்து கொண்டிருந்த அவரது தம்பியும் அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளர் ரவிச்சந்திரன் என்பவர் தடுக்க பாய்ந்த நிலையில் சுரேஷ் ரவிச்சந்திரன் கையில் அரிவாள் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனை கண்ட அந்த பகுதியில் இருந்தவர்கள் பலத்த காயமடைந்த ரவிச்சந்திரனை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ராஜபாளையம் அரசு மருத்துவமனை

இதனை அடுத்து தேர்தல் பரப்புரையை முடித்த முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரனை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

சேத்தூர் ஊர காவல் நிலையம்

மேலும் ரவீந்திரனின் உறவினர்கள் இதுகுறித்து சேத்தூர் ஊர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்போது புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிய சுரேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.

போலீசார் தீவிர விசாரணை

அதிமுக தேர்தல் பரப்புரையின் போது திமுகவை சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி அரிவாளால் வெட்டியது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply