குன்னூர் நகராட்சி கூட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை குறித்து பேசிய போது அதிமுக, திமுக. நகரமன்ற உறுப்பினர்கள் இடையே கைகலப்பு கூட்டம் பாதியிலேயே முடிந்தது. இந்த சம்பவம் குறித்து காணலாம்.
நீலகிரி மாவட்டம், அடுத்த குன்னூர் நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை நகர மன்ற தலைவர் வாசீம் ராஜா மற்றும் பொருப்பு ஆனையாளர் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பல்வேறு அடிப்படை தேவைகள் செய்து கொடுக்கப்பட வில்லை என்றும், அப்போது தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்தி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
போதைப் பொருட்கள் பயன்பாடு தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குன்னூரில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டதாகவும் குறிப்பிட்ட பள்ளியின் அருகே காவல் துறையினர் சோதனை செய்ய வேண்டும் என அதிமுக. கவுன்சிலர் கோரிக்கை வைத்தார்.

தமிழகத்தில் போதைப் பொருள்களின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக மாநில அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை காலத்தின் கட்டாயம் என்றே கூற வேண்டும். தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக. கவுன்சிலருக்கும் அதிமுக கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே கைகலப்பாக மாறியதால் கூட்டம் பாதியில் முடிந்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.