“இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல்) தேர்வு, 2023” க்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் 26.07.2023 அன்று வெளியிட்டுள்ளது. அரசு நிறுவனங்கள் / அலுவலகங்களுக்கான இளநிலைப் பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல்) பணிகளுக்கான தேர்வு பொதுப் போட்டியாக நடத்தப்படவுள்ளது. இந்தத் தேர்வில் 7 வது மத்திய ஊதியக் குழுவின் ஊதிய அடிப்படையில் குரூப் ‘பி’ (கெசட்டட் அல்லாத), லெவல் -6ல் அமைச்சு அல்லாத (ரூ.35400-112400/-) பதவிகள் உள்ளன. நாட்டின் எந்தப் பகுதியினரும் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள் ஆவர்.
பணிக்கான விவரங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, தேர்வுக் கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தும் முறை, தேர்வு அட்டவணை, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிக்கையில் உள்ளன.

தேர்வாணையத்தின் ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 16.08.2023 (23:00). ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பத்தை பதிவேற்ற வேண்டும். புகைப்படம் தொப்பி இல்லாமல் இருக்க வேண்டும், கண்ணாடி மற்றும் முகத்தின் முன் பார்வை தெரியும் வகையில் இருக்க வேண்டும்.
தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, 2023 அக்டோபரில், ஆந்திராவில் 10, புதுச்சேரியில் 01, தமிழ்நாட்டில் 07, தெலங்கானாவில் 03 என மொத்தம் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்.
Leave a Reply
You must be logged in to post a comment.