தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!

3 Min Read
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. வேளாங்கண்ணி தேவாலயம், சென்னை சாந்தோம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

- Advertisement -
Ad imageAd image

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனை ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் இந்நாளில் எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கோவை டவுன்ஹால் பகுதியில் பரிசு புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகத்துடன் துவங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடத்தப்பட்டது. கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்தார். குழந்தை இயேசு உருவ மொம்மை அனைவரிடமும் தூக்கி காட்டி குழந்தை ஏசு பிறப்பை தேவாலயத்தில் அவர் அறிவித்தார். பின்னர் அதனை குடிலில் வைத்த பின் ஆராதனைகள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்வுகளை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் நடத்தினார். இந்த சிறப்பு பிராத்தனை நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.

முன்னதாக பேட்டியளித்த மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கூறியதாவது; ஆண்டவர் மனித அவதாரம் எடுத்தநாள் இன்று எனவும், நாட்டில் சமாதானம், அமைதி நிலவ வேண்டும், போராட்டங்கள் போர் போன்றவை ஒழிய வேண்டும். இந்த புத்தாண்டு அனைவருக்கும் சமாதானம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என இந்த சிறப்பு திருப்பலியில் வேண்டுதல் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையினை உற்சாகமாக கொண்டாடி வருவதாகவும் , கிறிஸ்துமஸ் கேக் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்டு, பரிசு பொருட்களை பரிமாறிக்கொண்டு சிறப்பாக பண்டிகையினை கொண்டாட இருப்பதாக தேவாலயத்திற்கு வந்திருந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர். சிறப்பு திருப்பலியில் கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொலியில் ஜொலித்து வருகின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை கிண்டி அருகே பரங்கிமலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கிறிஸ்துமசையொட்டி மதுரை கீழவாசலில் பழமை வாய்ந்த தூய மரியன்னை தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது.

ஏசு பிறப்பான கிறிஸ்துமஸ் விழா கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். திருச்சி மேலபுதூர் தூய மரியன்னை பேராலயத்தில் பங்கு தந்தை சவாரி ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து வந்தும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

 

Share This Article

Leave a Reply