திரிஷா பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகானுக்கு சிரஞ்சீவி கண்டனம்..!

2 Min Read
சிரஞ்சீவி

திரிஷா பற்றி ஆபாசமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

இது குறித்து சிரஞ்சீவி எக்ஸ் தளத்தில் நேற்று கூறியிருப்பதாவது : திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கருத்துக்கள் என் கவனத்திற்கு வந்தது.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இந்த கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாகவும் மோசமானதாகவும் இருக்கிறது.இந்த கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும்.சிலர் வக்கிரத்தில் விழுந்து விடுகிறார்கள் மன்சூர் அலி காணும் அதில் ஒருவர்.திரிஷாவுடன் நான் நிற்கிறேன்.மேலும் இது போன்ற கொடூரமான கருத்துக்களும் உள்ளாக வேண்டிய ஒவ்வொரு பெண்ணும் திரிஷா போல் போராட வேண்டும்.இவ்வாறு சிரஞ்சீவி கூறியுள்ளார்.

திரிஷா பற்றி ஆபாசமாக பேசிய மன்சூர் அலிகான் மீது சட்ட பிரிவு 59 இன் கீழ் மற்றும் இதர தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.இதனால் மன்சூர் அலி கான் விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டது. அதேபோல் நடிகர் சங்கமும் மன்சூர் அலிகானுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

திரிஷா – மன்சூர் அலிகான்

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்தார். அவர் கூறியவாறு:
கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது குறித்து தான் பேசினேன்.நடிகர் சங்கம் மிகப்பெரிய தவறு செய்துள்ளது. நான் நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்பது அவர்களுக்கு தெரியும். என்னிடம் கேள்வி எதையும் நடிகர் சங்கம் கேட்கவில்லை.தொலைபேசியிலும் பேசவில்லை.நோட்டீஸ் அனுப்பி இந்த மாதிரி விளக்கம் கொடுங்க என்று கேட்க வேண்டும்.ஆனால் செய்யவில்லை.

ஒரு சங்கம் நடத்துகிறார்கள் இப்படி செய்யலாமா?நான்கு மணி நேரம் நடிகர் சங்கத்திற்கு நான் டைம் கொடுக்கிறேன்.நான் மன்னிப்பு கேட்பவன் இல்லை.நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறை செய்துள்ளது.நான் அமைதி காத்துக் கொண்டிருக்கிறேன்.எரிமலையாக குமரினேன் என்றால் எல்லாம் துண்டை காணோம் துணியை காணும் என்று கோமணத்தை உருவி விற்றுவேன்.எல்லாம் ஓடிப் போய் விடுவார்கள்.என்னை பலிகடா ஆக்கிவிட்டு நல்ல பெயரை எடுக்க பார்க்கிறீர்களா?இது என்ன நியாயம். நடிகர் சங்கம் என ஒரு சங்கம் இருந்தால் குறைந்தபட்சம் விளக்கம் கேட்க வேண்டாமா?மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும்.

திரிஷா

நான் யார் என்பது அவர்களுக்கு தெரியும்.பொண்ணு, மாப்பிள்ளை மாதிரி எல்லா பேப்பரிலும் எங்க போட்டோ போட்டு இருக்கிறீர்கள்.அந்த அம்மாவை திரிஷா விட நான் நல்லாகத்தான் இதில் இருக்கிறேன். இந்தப் பிரச்சனை ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டது அந்த வகையில் எனக்கு சந்தோஷம்தான். நடிகர் சங்கம் விசாரணை செய்யாமல் செய்தது இமாலய தவறு.சினிமாவில் கொலை செய்கிறார்கள் என்றால் நிஜமாகவா கொலை செய்கிறார்கள்.?சினிமாவில் ரேப் என்றால் நிஜமாகவா செய்வதா?அறிவு இருக்கிறதா?

சங்கத்திற்கு அறிவில்லையா?தமிழ்நாடு என் பக்கம் உள்ளது.இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.எந்த ஆணையமும் வரட்டும் அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை.நான் கலைஞர்களை இழுக்காக பேசுகிறவன் இல்லை.அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடியவன்.திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றி தான் சொல்ல வேண்டும்.திரிஷா குறித்து நான் தவறாக பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article

Leave a Reply