VPM : சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் 44 லட்சத்துடன் மாயம் , கடத்தலா ?

2 Min Read
காசாளர் முகேஷ்

காசாளர் முகேஷ்

- Advertisement -
Ad imageAd image

இந்தியன் வங்கிக்குச் சொந்தமான கிளை ஒன்று விழுப்புரம் அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது . இந்த வங்கியில் முகேஷ் என்ற இளைஞர் காசாளராக பணியாற்றி வருகிறார்.  

நேற்று காலை வழக்கம் போல் வங்கிக்கு வந்த முகேஷ் தனக்கு  உடல் நலம்  சரியில்லாததால் அருகில் இருக்கும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று விட்டு வருவதாக சக ஊழியர்களிடம்  தெரிவித்துவிட்டு காலை 10:40 மணியளவில் வங்கியை விட்டு ஒரு பையுடன்  தனது இருசக்கர  வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் .

சிந்தாமணி இந்தியன் வங்கி 


நீண்ட நேரம் ஆகியும் முகேஷ் வங்கிக்குத் திரும்பாததால் சந்தேகம்  அடைந்த சக வங்கி ஊழியர்கள் ,தங்களது வங்கி மேலாளர்  பிரியதர்ஷனியிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர் .

மேலும் வங்கியில் வசூலான பணத்தைக் கணக்கிட்ட பொழுது ரூபாய் 44 லட்ச  குறைவாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் வங்கியிலிருந்த சிசிடிவி படக்கருவிகளைப் பரிசோதித்த பொழுது முகேஷ் வங்கியை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு பணத்தை ஒரு பையில் அடுக்கி வைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது .

புகார் மனு 


அவரது அலைப்பேசியும் அனைத்து வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் வங்கி மேலாளர் பிரியதர்ஷினி விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார் புகாரைகப் பெற்றுக் கொண்ட ஆய்வாளர் ஆனந்தன் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார் .


கடத்தல்:


இந்நிலையில் வங்கி காசாளர் முகேஷ் தனது சகோதரிக்கு  வாட்ஸ்அப் ஆடியோ ஒன்றை அனுப்பி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது , அதில் முகேஷ் தன்னை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி வைத்திருப்பதாகவும் தான் உயிருடன் திரும்புவதே  சந்தேகம்தான் என்பன போல ஆடியோ ஒன்றைப் பதிவு செய்து அனுப்பி வைத்துள்ளார்  .

இந்த சம்பவம் குறித்து ‘தி நியூஸ் கலெக்ட்’ முகேஷை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை  காவல் அதிகாரியைத் தொடர்பு கொண்ட போது   முகேஷை யாரும் கடத்தி இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அவர் தனது பையில் பணத்தை அடுக்கி வைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்னை நோக்கிச் செல்லும் காணொளி ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ,அவரது மொபைல் சிக்னல் கடைசியாக சென்னை திருவான்மியூர் பகுதியில் பதிவு செய்யபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்  .

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் 

தனிப்படை அவரை விரைவில்  கண்டுபிடித்து விசாரணை மேற்கொள்ளும் போது உண்மை தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார் .


மேலும் முகேஷ்  கடத்தப்பட்டதாக அவர்களது குடும்பத்தார் கொடுத்த புகாரின் பேரில் ஒரு தனி வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது அவரைத் தேடும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Share This Article

Leave a Reply