செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,”33 ஆண்டுகளுக்கு முன்பு தான் கருவுற்றிருந்த நிலையில் செவிலியராகப் பணிக்குச் சேர்ந்த கதீஜா பீவி அவர்கள், தனது பணிக்காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்களில் பங்களித்து இன்று ஓய்வுபெறுகிறார்.
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புக்கும் அனைத்து மருத்துவப் பணியாளர்களின் பெருந்தொண்டுக்கும் அடையாளச் சின்னமாக இவரது பணி அமைந்திருக்கிறது.
பத்தாயிரம் பிள்ளைப்பேற்றுக்குத் துணைபுரிந்து பல குடும்பங்களில் மகிழ்ச்சியை விதைத்த ‘செவிலித்தாய்’ கதீஜா பீவி அவர்களுக்கு எனது நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து, அவரது ஓய்வுக்காலம் நிறைவானதாகத் திகழ்ந்திட வாழ்த்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.