Chennai : அணைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் திடீர் மரணம் .!

2 Min Read
ஜெயசித்ரா (49)

புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டி கிராமத்தை பூர்விகமாக கொண்டுள்ள ஜெயசித்ரா (வயது 49)  தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பெரவள்ளூர் விவேகானந்தர் தெருவில் தனியாக வசித்து வருகிறார் .

- Advertisement -
Ad imageAd image

மேலும் இவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் . இது வரை திருமணம் செய்து கொள்ளாமல் தனது சகோதரி மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா .

செம்பியம் காவல் நிலையம்

நேற்று பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய அவர் , அயனவரத்தில் வசிக்கும் தந்து சகோதரியின் வீட்டுக்கு சென்றுள்ளார் . அங்கே அவரது சகோதரியுடன் பேசிக்கொண்டிருந்த ஜெயசித்ரா , திடீரென்று வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது சகோதரி , அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மயங்கி விழுந்த ஜெயசித்ராவை அருகிலுள்ள , தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார் .

அங்கே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருக்கு சக்கரை அளவு அதிகமாக இருப்பதை கண்டறிந்து உடனடியாக , ஜெயசித்ராவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர் .

ஜெயசித்ரா

மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஜெயசித்ரா , கெல்லிஸ் பகுதியிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார் .

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசித்ரா வரும் வழியிலேயே உயிர் இழந்துவிட்டதாக உறுதி செய்தனர் . அவரது இந்த மரணம் மாரடைப்பால் நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர் .

ஜெயசித்ரா (49)

ஜெயசித்ராவின் சகோதரி அளித்த தகவலின் பேரில் அயனாவரம் போலீசார் ஜெயசித்ரா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அயனாவரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இறுதி அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் என அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

Share This Article

Leave a Reply