தற்போதைய நட்சத்திரங்கள் சினிமாவை தாண்டி வேறு தொழில்களில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆரம்பகால புகழ்பெற்ற ஹீரோக்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகை பானுமதி போன்றோர் சொந்தமாக ஸ்டூடியோக்கள் வைத்து இருந்தனர்.அதன் பிறகு வந்த ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்கள் நிலத்தில் முதலீடு செய்தனர். நடிகைகள் அம்பிகா, ராதா ஸ்டுடியோ கட்டி வருமானம் பார்த்தனர் தற்போதைய முன்னணி கதாநாயகன் விஜய், திருமண மண்டபம், ரியல் எஸ்டேட் முதலீடு என்று இருக்கிறார்.

அஜித் குமார் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் மூலம் சாலை பயணம் மேற்கொள்வோர்களுக்கு ஏ.கே மோட்டோ ரைடு என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். சூர்யா பட கம்பெனி உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.ஆர்யா சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஓட்டல் தொழில் செய்தார். இப்போது சினிமாவில் கிடைத்த வருமானம் மூலம் பல இடங்களில் உணவகம் திறந்து இருக்கிறார்.தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட், துபாயில் எண்ணெய் நிறுவனம், படக் கம்பெனி, சர்வதேச சந்தையில் போட்டியிட கூடிய அளவுக்கு அழகு சாதன பொருட்கள் என பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சம அளவு மார்க்கெட்டை தக்க வைத்திருக்கும் தமன்னா இணையதளம் மூலம் தங்க நகை வியாபாரம் செய்து வருகிறார்.சினிமாவுக்கு வந்த கொஞ்ச காலத்திலேயே விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்த கீர்த்தி சுரேஷ் சம்பாத்தியத்தை முதலீடாக்கி அழகு சாதனப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார்.தமிழில் அறிமுகமாகி இந்தியில் கொடிக்கட்டி பறக்கும் டாப்ஸி ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகிறார்.மைனா படத்தின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற அமலா பால் தன் சொந்த மாநிலமான கேரளாவில் யோகா மையங்கள், ஆரோக்கியம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி நிறுவனம் என பல வியாபாரம் செய்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள காஜல் அகர்வால் தன் தங்கையுடன் சேர்ந்து தங்க நகை வியாபாரம் செய்கிறார்.தனுஷ், சிவகார்த்திகேயன், திரிஷா, அனுஷ்கா, சமந்தா உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் ரியல் எஸ்டேட்டில் அதிக முதலீடு செய்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.