திருநெல்வேலி அருகே அரசு பள்ளியில் இரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மத்தியில் நடந்த மோதலில், இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஜாதிப் பெயரை சொல்லிக்கொண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலால் இரண்டு மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு இதேபோன்று பிளஸ் டூ படிக்கும் மாணவன் மீது சாதிய தாக்குதல் நடத்தப்பட்டு,
இப்போது அந்த மாணவன் கல்லூரியில் படித்து வருகின்ற சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில் மீண்டும் ஒரு சாதி மோதல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், அடுத்த மூன்றடைப்பு பகுதி அருகே மருதகுளம் கிராமத்தில் உள்ள ரோஸ்லின் செல்லையா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் பொன்னாக்குடி, மாயனேரி, மருதகுளம் உள்ளிட்ட கிராமங்களைச் சார்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாலை இடைவேளையின் போது பொன்னாக்குடி மற்றும் மாயனேரி பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மோதிக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக தெரிய வருகிறது.

இந்த மோதலில், 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு கையில் படுகாயமும், மற்றொரு மாணவனுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனை அடுத்து, பள்ளி ஆசிரியர்கள் மோதலில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைந்து போக செய்து,
தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களை அலுவலகம் அழைத்து சென்று விசாரித்தனர். மேலும், படுகாயம் அடைந்த மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில்;-மாயனேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொன்னாகுடியை சேர்ந்த மாணவர்கள் மோதிக் கொண்டனர். பொன்னாக்குடி, மாயனேரி உள்ளிட்ட ஊர்களுக்கு இடையே உள்ள மாணவர்களிடம் அந்த மோதல்.
கடந்த முறை ஏற்பட்ட சாதி மோதலில் பாதிக்கப்பட்ட மாணவனை நேரில் சந்தித்த நடிகர் தாடி பாலாஜி இது போன்று இனிமேல் நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி வந்தார்.

அந்த வகையில் நேற்று நடைபெற்றிருக்கும் இந்த மோதல் எனக்கு பெரும் மனம் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், இதுபோல் செயலில் யாரும் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக அரசு அதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நடிகர் தாடி பாலாஜி.
Leave a Reply
You must be logged in to post a comment.