TNPSC பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
TNPSC தேர்வு முறை :
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அரசு பணி தேர்வுகளுக்கானா தகுதி தேர்வுகளில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் விண்ணப்பித்து தேர்வு எழுதி வருகின்றனர். இந்த தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற , தனியார் மற்றும் அல்லது அரசு சார்பிலும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது .
மேலும் வினாத்தாள்களில் தவிர்க்கமுடியாத நேரங்களில் சில பிழைகள் மற்றும் தவறுதலான கேள்விகள் இடம் பெற்று வருவதும் நம்மால் காண முடிகிறது . அவ்வாறான சூழ்நிலையில் வினாத்தாளில் பிழைகள் கண்டறியப்பட்டால் அந்த கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதும் வழக்கமாக ஒன்றாக உள்ளது.
மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வர்களுக்கு மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதிலும் தீர்வு எட்டவில்லை எனில் சில தேர்வர்கள் நீதிமன்றங்கள் வாயிலாக இதற்கான தீர்வை நாடுகின்றனர்.
அந்த வகையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குருப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க உத்தரவிட கோரிய வழக்கில் டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் விவரம் :
மதுரையைச் சேர்ந்த கண்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கடந்த மார்ச்2024 28ஆம் தேதி குரூப் 1 தேர்வு அறிவிப்பை tnpsc வெளியிட்டது. முதல் நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 7 நாட்களுக்குள்ளாக குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 6 வினாக்களில் மொழி பெயர்ப்பு தவறுகள் இருந்ததால், அது தொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்திருந்தேன்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/many-years-of-dream-comes-true-as-madras-high-court-ordered-to-provide-all-basic-amenites-to-tribes-of-kalvarayan-hills/
இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதோடு, 6 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு, “தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல தேர்வுகளுக்கு இதுவரை இறுதி விடை குறிப்புகள் வெளியிடப்படவில்லை நீதித்துறை தேர்வுகளுக்கு கூட இறுதி குறிப்புகள் வெளியிடப்படவில்லை” எனக் கூறிய நீதிபதிகள் , tnpsc தலைவர் பதிலிக்க்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.