அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

1 Min Read
கௌதமிசிகாமணி அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா பூத்துறை கிராமத்தில் கடந்த திமுக ஆட்சியில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுக்கப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசுக்கு 28 .37 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என வழக்கு பதிவு செய்யப்பட்டு, அமைச்சர் பொன்முடி அவரது மகன் கௌதமி சிகாமணி எம்பி கட்சி நிர்வாகிகள் ராஜ மகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய ஏழு பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யவும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கௌதம சிகாமணி எம்பி வழக்கு தொடர்ந்து இருந்திருந்தால் அந்த வழக்கு கடந்த 19ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அதில் அளவுக்கு அதிகமான மண் எடுத்து அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தி முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு  விசாரணைத்து வந்தது அப்போது ராஜ மகேந்திரன், சுதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய ஐந்து பேர் ஆஜானார்கள். ஒரே மாதிரியான குற்றச்சாட்டு உள்ளது தனித்தனியாக பிரித்து மாற்றி விசாரிக்க வேண்டும். என கோரினார். அதற்கு அரசு தரப்பில் ஆட்சோபனை தெரிவிக்கப்பட்டது. நீதிபதி பூர்ணிமா விசாரணையை வரும் 30 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article

Leave a Reply