நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகளில் தனுஷ் தவிர்கமுடியாதவர்.தான் நடித்த படிங்களில் அதிக வசூல் ஈட்டியவர்களில் தனுஷ் நடிகர் ஒரு முக்கியமானவர்.இளைஞர்களை கவரும் பல தமி படங்களை வழங்கியவர் நடிகர் தனுஷ்.
இந்த நிலையில் 2014-ல் வெளியான வேலையில்லா பட்டதாரி ரசிகர்களிடையே அதிக வரவேர்பை பெற்ற படம்.வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் இல்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும், அவரது மனைவி ஐஸ்வர்யாவும் உள்ளனர்.
‘வேலையில்லா பட்டதாரி’ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது அப்போது புகை பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்ற அறிவிப்பு அந்த காட்சியில் இடம்பெறவில்லை. இதையடுத்து நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துதுறை இயக்குனர் டாக்டர் வி.கே.பழனி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.