பெண் பத்திரிகையாளர் புகார்
சென்னையில் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரில் சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை, தேனி, சேலத்தை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் புகாரில் சென்னை மாநகர குற்ற பிரிவில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. என்டிடிவி பிராஃபிட் தொலைக்காட்சியின் நியூஸ் எடிட்டராக இருப்பவர் சந்தியா ரவிசங்கர். இவர் சென்னை மாநகர குற்ற பிரிவில் புகார் அளித்தார். அதில் பெண் பத்திரிகையாளர் குறித்து கோலமாவு சந்தியா என்ற பெயரில் இழிவாக எழுதிய கட்டுரை மற்றும் அவர் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சவுக்கு சங்கர் தனது இணைய பக்கத்தில் வெளியிட்டதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார்.
சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு..
டிரைவர், உதவியாளரையும் விடாத தேனி போலீசார்கைது செய்த இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் கொடுத்த இந்த புகாரை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சென்னை மாநகர குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளில் வழக்கப்பதிவு செய்துள்ளனர். அதன்படி 294 பி (ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்துதல்), 354டி (அனுமதியின்றி பின்தொடர்தல்), 506(1) (குற்றவியல் மிரட்டல்), 509 (பெண்ணை தவறான நோக்கத்தில் அவமதித்தல்) மற்றும் தமிழ்நாடு பெண் துன்புறுத்தல் தடைச் சட்டம் பிரிவு 4 உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் க்ரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்தனர். தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த 4ம் தேதி கோவை க்ரைம் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு தேனியில் அவரது காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா சிக்கியது தொடர்பாக கஞ்சா வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதிதாக ஒரு வழக்கு..
பெண் எஸ்ஐ அளித்த புகாரில் சேலம் போலீஸ் நடவடிக்கை அதன்பிறகு நேற்று இரவு சேலம் சைபர் க்ரைம் போலீசில் சவுக்கு சங்கர் மீது 3வது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பெண் காவலர்கள் குறித்த அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பாக சேலம் சைபர் க்ரைம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரிலும் அவர் மீது வழக்குப்பதிவானது. இப்படி கோவை, தேனி, சேலத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தான் தற்போது சென்னை குற்றப்பிரிவு போலீசிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் அவருன் தொடர்பில் இருந்த பலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.