வாணியம்பாடி அருகே பாமக பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு,சாலை மறியலில் ஈடுப்பட்ட பாமகவினர்..

1 Min Read
கண்ணாடி உடைக்கப்பட்ட கார்

திருப்பத்தூர் மாவட்டம்.
வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்பவர் தாட்கோ மானியம் மூலம் திருப்பத்தூர்  பகுதியில் உள்ள செல்வகணபதி என்னும்  தனியார் டிரேடர்ஸ் மூலம் ஆம்பூர் மற்றும் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த அஜித்குமார், முனிசாமி, தாமோதிரன் ஆகிய மூன்று நபர்களுக்கு  மானிய விலையில் மூன்று டிராக்டர் வாங்கி கொடுத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image


இந்நிலையில் செந்தில் குமார் பொய்யான ஆவணங்களை தாயார் செய்து டிராக்டர்களை வாங்கியதாக கூறி செல்வகணபதி டிரேடர்ஸின் பங்குதாரர்களாக உள்ள திருப்பத்தூர்  பாமக  மாவட்ட செயலாளர் சிவா என்பவர் செந்தில் குமாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
இதில் வாக்குவாதம் முற்றிபோக செந்தில் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவாவின் கார் கண்ணாடியை கற்களால் உடைத்துள்ளனர்.


இதனை தொடர்ந்து செந்தில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களை  உடனடியாக கைது செய்யக்கோரி சிவா மற்றும் பாமகவை சேர்ந்த அவரது  ஆதரவாளர்கள் வாணியம்பாடி – ஆலங்காயம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர்.


பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில்ஈடுப்பட்டு இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு பாமகவினர் கலைந்து சென்றனர்..
மேலும் செந்தில் குமார் மற்றும் சிவா ஆகிய இருவரு தரப்பினரின்  புகாரை ஏற்று ஆலங்காயம் காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Share This Article

Leave a Reply