கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. நடிகராக அறிமுகமாகி மக்கள் மனதில் என்றும் மறக்க முடியாத இடத்தை நடிகர் விஜயகாந்த் பிடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிக்கும் காலத்தில் இருந்தே தனது நற்பனி மன்றம் மூலம் மக்களுக்கு பவ வகையிலும் உதவி செய்தார். நடிகர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவை துக்க தினமாக தமிழக மக்கள் அனுசரித்தார்கள்.

இன்றும் அவரது நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். இந்த நிலையில் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு 125 நாட்களில் தமிழக முழுவதும் 15 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய உள்ளனர்.

அதுமட்டும் இன்றி நினைவிடத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவு சின்னமாகப் போற்றப்படுகிறது. இந்த நிலையில் இது லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.