பேசப்படும் வேட்பாளர்கள்-ஈரோடு

3 Min Read
ஈரோடு

முதல் பொதுத்தேர்தல் நடந்த சமயத்தில் ஈரோடு இரட்டை உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. பெரியசாமி பொதுத் தொகுதிக்கும், பாலகிருஷ்ணன் தனித் தொகுதிக்குமான உறுப்பினர்களாக முதல் மக்களவையில் பங்காற்றினர்.திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரான பெரியார், கணிதமேதை ராமானுஜன் ஆகியோர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு. மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்ற பெயர்களும் உண்டு.

- Advertisement -
Ad imageAd image
மதிமுக கணேசமூர்த்தி

ஈரோடு மக்களவை தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

குமாரபாளையம்
ஈரோடு கிழக்கு
ஈரோடு மேற்கு
மொடக்குறிச்சி
தாராபுரம் (தனி)
காங்கேயம். ஆகியவை

திமுக பிரகாஷ்

கடந்த ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி அதிமுக வேட்பாளர் மணிமாறனைவிட 2,10,618 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

ஆற்றல் அசோக்குமார்

தொகுதி சீரமைக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களில் ம.தி.மு.க-வின் கணேசமூர்த்தி இரண்டு முறையும், அ.தி.மு.க-வின் செல்வகுமார சின்னையன் ஒரு முறையும் வெற்றிபெற்றிருக்கிறார். தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஈரோடு தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்வாகவில்லை என்ற மனக்குறை தி.மு.க-வினரிடமே இருக்கிறது. வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணிக்குக் களம் சாதகமாக இருக்கும் என்று நினைப்பதால், ஈரோடு தொகுதியை தி.மு.க.-வுக்கு ஒதுக்க வேண்டுமென அந்தக் கட்சித் தலைமைக்கு மாவட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

கே.கே.சி.பாலு

தி.மு.க-வுக்கு சீட் ஒதுக்கும்பட்சத்தில் அந்தக் கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாஷ் திமுக சார்பில் களமிறக்கப்படலாம் என பரவலாக பேசப்படுகிறது.மேலும் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் சச்சிதானந்தம், கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் ஆகிய நான்கு பேரும் சீட் பெற தீவிரமாக முயன்றுவருகின்றனர்.இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கணேசமூர்த்தி மதிமுக வின் பம்பரம் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

கடந்த தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொ.ம.தே.க., இந்த முறை ஈரோட்டைக் குறிவைத்துக் காய்களை நகர்த்திவருகிறது. இதற்காகவே தனது சமூக பலத்தை நிரூபிக்கும் வகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஈரோட்டை ஒட்டிய பெருந்துறையில் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தையும், கின்னஸ் ரெக்கார்டாக வள்ளிக்கும்மி நடனத்தையும் அரங்கேற்றியிருக்கிறது. அந்தக் கட்சியின் பொருளாளர் கே.கே.சி.பாலு, மாநில இளைஞரணிச் செயலாளர் சூர்யமூர்த்தி இருவரிடையேதான் போட்டி நிலவுகிறதாம்.

மேலும் வரும் தேர்தலில் பா.ஜ.க-வின் ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி வேட்பாளர் அசோக்குமார்தான் என அந்தக் கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டுவந்த நிலையில், திடீரென அசோக்குமார் அ.தி.மு.க-வில் இணைந்தார் “திருச்செங்கோடு தொகுதி முன்னாள் அதிமுக எம்.பி-யான செளந்திரத்தின் மகன்தான் அசோக்குமார். தற்போதைய மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதியின் மகளை அசோக்குமார் திருமணம் செய்திருக்கிறார். `ஆற்றல்’ என்ற பெயரில் அறக்கட்டளையையும் பள்ளிகளையும் நடத்திவருகிறார்.ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளராக பேசப்பட்டு வருகிறார்.

நாம் தமிழர்

மேலும் ஈரோடு பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக மீண்டும் கேட்டு பெரும் என்கிற நம்பிக்கையை கணேசமூர்த்திக்கு இருந்தாலும் உதயசூரியன் சின்னத்தில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கிறார்.

அதேபோன்று திமுக இந்த முறை மதிமுகவிற்கு இடம் கொடுக்காமல் சொந்த கட்சி பலத்தை நிரூபிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது பாஜகவில் இன்னும் வேட்பாளர் யார் என்ற பேச்சு கூட அடிபடவில்லை. அதேபோன்று நாம் தமிழர் கட்சியும் தனது வேட்பாளரை அறிவித்துள்ளது ஆம் மருத்துவர் கார்மேகம்.காங்கிரஸ் கட்சி ஈரோடு தொகுதியை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை, இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணிகளின் கையில் தான் இருக்கிறது ஈரோடு பாராளுமன்ற தொகுதி.

Share This Article

Leave a Reply