பேசப்படும் வேட்பாளர்கள்-சேலம்

2 Min Read

சேலம் மக்களவைத் தொகுதி, தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 15வது தொகுதி ஆகும்.
திருச்செங்கோடு தொகுதியில் உள்ளடங்கியிருந்த, எடப்பாடி சட்டமன்றத் தொகுதியானது, 2008 ஆம் ஆண்டு செய்யப்பட்ட, தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, சேலம் தொகுதியின் கீழ் கொண்டு வரப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image
செல்வகணபதி

இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:

ஓமலூர்
எடப்பாடி
சேலம் மேற்கு
சேலம் வடக்கு
சேலம் தெற்கு
வீரபாண்டி ஆகியன ஆகும்.

சேலம் மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் காங்கிரஸ் 7 முறையும், திமுக மற்றும் அதிமுக தலா 4 முறையும் வெற்றி வாகை சூடியுள்ளன. தற்போது அதிமுக 4 இடங்களையும் திமுக 1 இடமும் பாமக 1 இடமும் சட்டமன்ற தேர்தலில் வென்றுள்ளன.

பார்த்திபன்

சேலம் தொகுதியில் செல்வகணபதிக்கு போட்டியாக சிட்டிங் எம்.பி.யான பார்த்திபன், வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகன் டாக்டர் பிரபு, ராஜா தமிழ்மாறன் உள்ளிட்ட இன்னும் ஓரிரு முக்கிய பிரமுகர்களும் எம்.பி. சீட்டை எதிர்பார்ப்பதால், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு யாருக்காக தலைமையிடம் பரிந்துரைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என கட்சிகள் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவை பொருத்தவரை தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ் ஆர் பார்த்திபனுக்கு சீட்டு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளரான டி எம் செல்வகணபதி தான் போட்டியிடப்போகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

செம்மலை

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் அடங்கியுள்ள ஆறு சட்டமன்ற தொகுதியிலும் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் டி எம் செல்வவதிக்கு சீட்டு உறுதியாகும் என்று பேசப்படுகிறது. இதற்கு இடையில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வீரபாண்டி செழியனின் மருமகனும் மருத்துவர் தருண் பெயரும் பேசப்பட்டு வருகிறது.

அன்புமணி

அதிமுக தரப்பில் ஓமலூர் ஒன்றிய அதிமுகவைத் தலைவரும் பிரபல காண்ட்ராக்டரான பரமசிவத்தின் மகன் விக்னேஷுக்கு சீட்டு கிடைக்கும் என்று சொல்லப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் சென்மலைக்கு தான் சீட்டு என்றும் பேசப்பட்டு வருகிறது. பாமக தேமுதிக பாஜக கூட்டணிக்கு வந்தாலும் வராவிட்டாலும் பாஜக தரப்பில் வேட்பாளரை நிறுத்துவது என்று அந்த கட்சி முடிவு செய்துள்ளது அப்படி வேட்பாலரை அறிவிக்க இருக்கும் நிலையில் ஏசி முருகேசன் அறிவிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

மருத்துவர் தருண்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த முறை போட்டியிட்ட இளைஞர் ஒருவர் போட்டியிட போவதாக பேசப்பட்டு வருகிறது. இதனிடையில் பாஜகவுடன் பாமக இணையும் நிலையில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட போவதாகவும் பேசப்பட்டு வருகிறது பொறுத்திருந்து பார்ப்போம்

Share This Article

Leave a Reply