- சென்னை டி.பி.ஜெயின் கல்லூரியில் அரசு உதவிப் பெறும் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து தமிழக அரசு, கல்லூரி நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி. ஜெயின் கல்லூரி நிர்வாகம் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளான 5 இளநிலை பாடப்பிரிவுகள் மற்றும் 2 முதுநிலை பாடப்பிரிவுகளை கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை நடத்தாமல் மூடுவதை எதிர்த்த ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இந்த பாடப்பிரிவுகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு முதல் மாணவர்கள் சேரவில்லை என்பதாலும், ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை என்பதாலும் இந்தப் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் எனக்கோரி கல்லூரி நிர்வாகம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த வழக்கை விசாரி்த்த தனி நீதிபதி, இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளை அரசிடம் ஒப்படைப்பு செய்தால் அதையேற்று தமிழக அரசு இரு வாரங்களில் தகுந்த உத்தரவைப் பிறப்பி்க்க வேண்டும், என கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளரும், கல்வியாளருமான பி.பி. பிரின்ஸ் கஜேந்திரபாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனுதாரராக மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில், கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்று வந்த அரசு உதவிபெறும் பாடவகுப்புகளை மூடுவது என்பது ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கான வாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/thambaram-intercity-express-train-service-in-trichy-member-of-sarliament-s-murasoli-waved-the-flag-and-inaugurated-it/#google_vignette
இந்த இடையீட்டு மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பது தொடர்பான விசாரணை நீதிபதிகள் பி.பி.பாலாஜி, ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.