கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சோகம் – வெளியான அதிர்ச்சி வீடியோ..!

3 Min Read

இந்தோனேசியா நாட்டில் கால்பந்து போட்டி நடக்கும் போதே வீரர் ஒருவர் எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கி உயிரிழந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

உலகின் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு என்றால் அது கால்பந்து தான். பல்வேறு நாடுகளிலும் கால்பந்து போட்டிக்குத் தனியாக ரசிகர்களே இருக்கிறார்கள். கடந்த சில காலமாகக் கால்பந்து போட்டிகளில் நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சி தருபவையாகவே உள்ளன. அப்படியொரு பகீர் சம்பவம் தான் இந்தோனேசிய நாட்டில் நடந்துள்ளது.

உயிரிழந்த கால்பந்து

அங்கே மழை பெய்து கொண்டு இருந்த போது விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து வீரர் ஒருவரை மின்னல் தாக்கிய வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி ஸ்டேடியத்தில் கடந்த சனிக்கிழமை இரண்டு உள்ளூர் அணிகளுக்கு இடையே நட்பு ரீதியான போட்டி நடந்துள்ளது.

மழை பெய்து கொண்டு இருந்த போதும் போட்டி தொடர்ந்து நடத்தப்பட்ட நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே அந்த வீரர் சுருண்டு விழுந்தார். அந்த கால்பந்து வீரர் சுபாங்கைச் சேர்ந்த செப்டைன் ரஹர்ஜா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் செப்டைன் ரஹர்ஜா படுகாயமடைந்தார்.

கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சோகம்

செப்டைன் ரஹர்ஜாவுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கே சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த அந்த வீரரின் நினைவாக இந்தோனேசியாவில் பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் 35 வயதான செப்டைன் ரஹர்ஜாவை மின்னல் தாக்கிய வீடியோ தான் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தோனேசிய நேரப்படி சனிக்கிழமை மாலை 4:20 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் இணையம் முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சோகம்

மழை பெய்யும் பொது திறந்தவெளி மைதானத்தில் விளையாடுவது எந்தளவுக்கு ஆபத்தானது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. பொதுவாக மின்னல் உயரமான கட்டிடங்களையே தாக்கும். ஆனால், இங்கே மின்னல் அந்த வீரர் மீது விழுந்துள்ளது. அந்த வீரரைத் தாக்கிய மின்னல் உருவான மேகம் மைதானத்திலிருந்து வெறும் 300 மீட்டர் உயரத்தில் இருந்துள்ளது.

பொதுவாகக் கால்பந்து போட்டிகள் மழை பெய்தாலும் கூட தொடர்ந்து நடத்தப்படும். இருப்பினும், வானிலை மிகவும் மோசமடைந்தால் போட்டியை நிறுத்தும் அதிகாரம் நடுவருக்கு இருக்கிறது. இந்த நிகழ்வைப் பொறுத்தவரைப் போட்டி ஆரம்பிக்கும் போது வானிலை ரொம்ப மோசமாக எல்லாம் இல்லையாம்.

கால்பந்து மைதானத்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் உயிரிழந்த சோகம்

ஆனால் போட்டி ஆரம்பித்துக் கொஞ்ச நேரத்தில் வானிலை மொத்தமாக மாறியதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தோனேசியாவில் புட்பால் வீரர் ஒருவர் மின்னல் தாக்குவது இது முதல்முறை இல்லை. கடந்த 2023-ம் ஆண்டில், கிழக்கு ஜாவாவில் உள்ள போஜோனெகோரோவில் நடந்த போட்டியின் போதும் இதேபோல வீரர் ஒருவரை மீது மின்னல் தாக்கியது.

இதையடுத்து அந்த வீரருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு அவர் சுயநினைவு பெற்றார்.

Share This Article

Leave a Reply